*    தமிழகம், கேரளா உள்ளீட்ட தென் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த, 14  பயங்கவரவாதிகள் சதி திட்டம் தீட்டிய, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களீல் மூன்று பயங்கரவாதிகளை பத்து நாட்கள் காவலில் எடுத்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
-    பத்திரிக்கை செய்தி. 


*    மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு, மத்திய மும்பையில், பிரியதர்ஷிணி தோட்டத்தில் பிரம்மாண்டமான மணிமண்டபம் கட்டப்படும். இதற்காக ஆயிரம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாக கூறுகின்றனர். இது தவறு. நினைவு மண்டபம் கட்டுவதற்காக அங்கிருக்கும் ஒரு மரத்தை கூட வெட்ட மாட்டோம். மண்டபத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். 
-    உத்தவ் தாக்கரே (மஹாராஷ்டிரா முதல்வர்)

 

*    இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தேசபக்தனுக்கும் உள்ளது. அதனால் எதிர்க்கட்சிகள் மாநில அளவிலான வேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல், அரசியல் சாசனத்தை காக்க, ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும். இதற்கு நாங்கள் கேரளாவில் முன்னுதாரணமாக திகழ்கிறோம். 
-    சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் பொதுசெயலாளர்)

 

*    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகரரெட்டி, ஆந்திர முதல்வராக இருந்த 2004 முதல் 2009 வரையிலான கால கட்டத்தில், ஜெகன் மோகன் ரெட்டியின் பல்வேறு நிறுவனங்களில் முறைகேடாக சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் கிளம்பி, வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கில் அவர் நேற்று ஆஜரானார். 
-    பத்திரிக்கை செய்தி

 

*    தமிழக அரசு பள்ளிகளின் அரையாண்டு மற்றும் பொது திருப்புதல் வினாத்தாள்கள் சமூக வலைதளங்கள் சிலவற்றில் தொடர்ந்து திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் இதை கல்வித்துறை கண்டும், காணாமல் இருப்பதாக கல்வியாளர்கள் மத்தியில் பெரும் புகார் எழுந்துள்ளது. 
-    பத்திரிக்கை செய்தி 

 

*    ஜெயலலிதா மறைந்தாலும் அவர் ஆசியுடன் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நாங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். முன்னாள் முதல்வரின் வாரிசுகள் அல்ல. அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்தும் நாங்கள் வரவில்லை. நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். ஜெயலலிதா காட்டிய பாதையில் பயணிக்கிறோம். அவ்வளவுதான். 
-    எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

 

*    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது அதை அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. ஆதரித்தது. அப்போது ஹிந்துக்களை ஆதரித்த தி.மு.க. இப்போது எதிர்ப்பது ஏன்? 
-    ஸ்மிருதி இரானி (மத்தியமைச்சர்)

 

*    இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமான் சென்றுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அங்குள்ள விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 
-    பத்திரிக்கை செய்தி


*    குமரி மாவட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ. சுட்டுக் கொல்லப்பட்டதை, தமிழக போலீஸார் மீது நடத்தப்பட்ட நேரடி யுத்தமாக நான் பார்க்கிறேன். போலீஸ் மீது கை வைத்தவர்களை, மீண்டும் அவ்வாறு செய்யாத அளவுக்கு மிக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-    பொன்ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க. தலைவர்)

 

*    ரஜினியின் தர்பார் படத்தில் ’பணம் இருந்தால், சிறையிலும் ஷாப்பிங் போகலாம்’ என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. அது, சசிகலா பற்றியதாக இருக்கலாம். பணம் இருக்கிறது என்பதற்காக எதையும் சாதிக்க முடியும் என எண்ணக்கூடாது. 
-    ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)
:    விஷ்ணுப்ரியா