இந்த ஒரே ஒரு கேள்விக்கு... பேசும் போதே.. கையெடுத்து "ஒரே கும்பிடு போட்ட அமைச்சர்"..!

மேகதாது விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசு அந்த பகுதியில் அணை வருவதை தடுக்கும் எனவும் அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். 

First Published Dec 20, 2018, 3:44 PM IST | Last Updated Dec 20, 2018, 3:44 PM IST

உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட உள்ள 8 மாவட்டங்களில் அதுகுறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் மின்சார வாரியம் செயல்படும் எனவும், உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்த பிறகும் அந்த பகுதியில் விவசாயம் செய்வதற்கு எந்த தடையும் விதிக்கப்படாது எனவும்  அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அப்போது , IG பொன்மாணிக்கவேல் பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு கையெடுத்து ஒரே கும்பிடு போட்டு, பதில் ஏதும் தெரிவிக்காமல் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு விட்டார். 

Video Top Stories