கமிஷனுக்கு ஆசைப்பட்டு, போலீஸை வைத்து மிரட்டுகிறாரா அமைச்சர்? அதிரவைக்கும் வீடியோ
ராமமூர்த்தி வகையறாவுக்கும் அமைச்சர் வீரமணி வகையறாவுக்கும் இடையேயான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள இடம் ராமமூர்த்தி ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் வாடகையில் இருந்து வருகின்றனர் அந்த இடத்தினை சேகர் ரெட்டி மூலம் ஆக்கிரமித்து அமைச்சர் வீரமணி விற்பனை செய்ய முயற்சித்து வருகிறார். ரியல் எஸ்டேட் அதிபர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் வீரமணிக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவில், ‘‘ரூ.100 கோடி கமிஷனுக்கு ஆசைப்பட்டு, போலீஸை வைத்து எங்களை மிரட்டும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
இதனால் ராமமூர்த்தி வகையறாவுக்கும் அமைச்சர் வீரமணி வகையறாவுக்கும் இடையேயான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அமைச்சர் வீரமணி தூண்டுதலின்பேரில் இன்று ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார் அமைச்சர் வீரமணி உத்தரவின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ் குமார் நேரடியாகச் சென்று ஜெயபிரகாஷ் என்பவரை கைது செய்தார்.