"குப்பையை போட்டு குப்பையை அள்ளிய ராஜஸ்தான் அமைச்சர்" - திருப்பத்தூரில் நடந்த பாஜக கூத்து...
வாஷிங்டன் செல்ல இருக்கும் மோடி, தனது ‘ஸ்வச் பாரத்’ பற்றி ட்ரம்ப்பிடம் பீற்றிக் கொள்வதற்காக அட்டகாசமான காணொலி ஒன்றிற்கு தமிழக பா.ஜ.க. ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த காணொலியை ஆங்கில சப்டைட்டிலோடு ட்ரம்ப் பார்த்தாரென்றால் வெள்ளை மாளிகையே அதிர அதிர கெக்கேபிக்கேவென சிரித்து சிகிலி பிகிலாகிடுவார்.
அப்டி இன்னாதான் இக்குது அந்த வீடியோவுல? என்கிறீர்களா! உங்களுக்கோஸரம் அந்த காணொளியை அப்லோடியிருக்கோம். நியூஸ வாசிச்சதுக்கு அப்பாலிக்கா அதை ப்பிளே பண்ணி நீங்களும் சீச்சுக்கோங்க.
தமிழ்நாடுக்கு வர்ற பா.ஜ.க. பெரும்புள்ளிகளை ஏதாச்சும் வீதியாண்ட இழுத்துகினு போயி குப்பைய அள்ள சொல்லி மீடியாவுக்கு சீன் போடுறது நம்ம தமிழக பி.ஜே.பி.யோட செம ட்ரிக்கு.
அப்டித்தான் வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு தூய்மை இந்தியா திட்ட சீனுக்காக, அய்யோ மன்னிக்கோணும் நியாயமாரே! பணிக்காக இன்னிக்கு ராஜஸ்தான் மாநில அமீச்சர் கிரண் மகேஸ்வரி திருப்பத்தூர் வந்தாங்க. இதுக்கோஸ்ரம் காத்தாலேயே மினிசிபாலிட்டி ஊழியருங்கோ துடப்பத்த எடுத்துக்கினு ரோட்டை சும்மா நெகு நெகுன்னு கூட்டிவுட்டு, பவுடர போட்டு, பொட்டும் வெச்சு பட்டய கெளப்பிட்டாங்கோ. துபாய் ரோடாட்டமா ச்சும்மா ஜம்முன்னு இருந்துச்சு. அங்கேயே சோறுகள கொட்டி, குழம்புகள ஊத்தி கலந்து கட்டி துன்னலாம்ங்கிற மாதிரி அவ்ளோ சுத்தம்.
ஆனா அமீச்சருக்கு மின்னாடியே இஸ்பாட்டுக்கு வந்த லோக்கல் பி.ஜே.பி. ஆளுங்கோ இம்புட்டு சுத்தத்த பார்த்து மெர்சலாகிட்டாங்கோ. ‘இன்னாபா இது இவ்ளோ சுத்தமா இருந்தா, நம்ம மினிஸ்டர இட்டாந்து இன்னா பண்ண சொல்றது? பெரிய பேஜாராகிடுமேன்னு’ பேஸ்தடிச்சு போயிட்டாங்கோ. அப்போ அதுல ஒரு நிர்வாகிக்கு உச்சந்தலையில உதிச்சுது பாருங்கோ ஒரு பிளானு. மச்சி அது செம மாஸ்டர் பிளானு.
அந்த வீதிக்கு அந்தாண்ட குந்திக்கினு இருந்த குப்பத்தொட்டியில இருந்து கை நிறைய குப்பைய அள்ளியாந்து, நல்லா இருந்த ரோட்டு மேலே நாலாபுறமும் சும்மா விசிறி வுட்டாங்க பாரு! சுத்தி நின்ன பொதுமக்கள் ‘இன்னாடா இது லூசுத்தனமா கீது!”ன்னு சிரிச்சுகினே நவுந்துட்டாங்க.
அப்பாலிக்கா ராஜஸ்தான் அமீச்சர் அங்கே வந்து செட் அப் பண்ணப்பட்டிருந்த குப்பைங்கள கிளவுஸு போட்டுக்கினு கூட்டியள்ளி சுத்தமாக்கிட்டு போனாங்கோ.
பப்ளிக்கு மத்தியில இப்டியொரு காரியத்த பண்ணோமேன்னு கொஞ்சங்கூட பீலிங்கு காட்டாம லோக்கல் பி.ஜே.பி. ஆளுங்களும் கலைஞ்சு காணாம போயிட்டாங்கோ.
இந்த காணொலிதான் இப்பொ தேசம் முழுக்க தெறிக்கவுட்டுகிட்டு இக்குது.
இதத்தான் பிரேம் மினிஸ்டரு மோடியும் வாஷிங்டனுக்கு எடுத்துட்டு போறாராமா!
இப்ப சொல்லு மச்சி இத்த பாக்கச்சொல்லோ டொனால்டு மவுத்துல சுளுக்கு வுழுறா மாதிரி சிரிக்க மாட்டாரா இன்னா!