Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பீதியில் , ஐதராபாத்தில் தாக்கப்படும் லாரி ஓட்டுனர்கள்..!! நாதியற்ற தமிழர்களை மீட்க கதறும் வைகோ..!!

 குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள்.

 

mdmk party general secretary vaiko statement to rescue Tamil lorry drivers from Hyderabad
Author
Chennai, First Published Mar 27, 2020, 2:39 PM IST

வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தமிழர்களுக்கு உதவுங்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள அவர்.  தமிழ் பெருமக்களே, கொரோனா என்றாலே நடு நடுங்க வைக்கின்ற இந்தக் கொடிய தொற்று நோய் அனைத்து மட்டத்திலும் வேகமாகப் பரவி வருகின்றது. உலகம் முழுவதும் இதுவரை ஐந்து இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.  24 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள்.  அறிவியலில் நாங்கள்தான் முதல் இடம் என்று சொல்லிக்கொண்டு இருந்த அமெரிக்காதான் இப்பொழுது இந்த நோயின் பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கின்றது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏராளமானவர்கள் இறந்து விட்டார்கள்,

 mdmk party general secretary vaiko statement to rescue Tamil lorry drivers from Hyderabad

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும்? இது இன்னும் வீரியமாகுமா? அல்லது தணியுமா? என்பது ஒரு வார காலத்திற்குப் பிறகுதான் தெரிவிக்க முடியும் என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழ்நாட்டைவிட்டு 20 நாட்களுக்கு முன்பு வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள்.ஒரு லாரி ஓட்டுநர், ஐதராபாத்தில் இருந்து கதறுவதைக் காணொளியில் கண்டேன். சாப்பாடு இல்லாமல் நாங்கள் பட்டினி கிடக்கின்றோம். எங்களை அடிக்கிறார்கள். எங்களுக்கு நாதியே இல்லையா? என்று கேட்கிறார்கள். 

mdmk party general secretary vaiko statement to rescue Tamil lorry drivers from Hyderabad

 வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் உட்பட்டோரைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்பாட்டின் பேரில், தமிழ்நாடு தலைமைச் செயலாளரும், மற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். என தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios