Asianet News TamilAsianet News Tamil

திடீர் உடல்நலக்குறைவு... அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி..!

உடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் 21, 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மதிமுக அறிக்கையில் தெரிவித்தள்ளது. 

mdmk mp vaiko admitted in madurai apollo hospital
Author
Tamil Nadu, First Published Aug 18, 2019, 3:08 PM IST

உடல்நலக்குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது, 25 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் நியூட்ரினோ, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசி பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், அரசியலில் மீண்டும் ஆக்ட்டிவாக இருப்பதாலும் நிறைய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதாலும், பொது விழாக்களில் கலந்து கொள்வதாலும் இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. mdmk mp vaiko admitted in madurai apollo hospital

இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் 21, 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மதிமுக அறிக்கையில் தெரிவித்தள்ளது. mdmk mp vaiko admitted in madurai apollo hospital

மேலும், மருத்துவரின் ஆலோசனை படி வைகோ ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதிமுக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios