Asianet News TamilAsianet News Tamil

அணியும் உடைகளை வைத்து அடையாளம் காண்பார்களாம்... மோடியை வெளுத்துவாங்கிய மம்தா பானர்ஜி!

 "ஒருவரின் ஆடைகளைப் பார்த்து நீங்கள் அவர்களின் அரசியலை புரிந்துகொள்ள முடியுமா? என்னால் அப்படியெல்லாம் சிந்திக்க முடியவில்லை. இன்னும் சில நாட்களில் கழுத்தில் அணியும் துண்டு காவி நிறமாக இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.” என மம்தா பேசினார். 

Mamata bannerji attacked PM Modi on NAA speech
Author
West Bengal, First Published Dec 17, 2019, 10:59 PM IST

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவோரை அவர்கள் அணியும் உடைகளை வைத்து அடையாளம் காணலாம் என பிரதமர் மோடி பேசியதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். Mamata bannerji attacked PM Modi on NAA speech
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வட கிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தேறி உள்ளன. இச்சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. மேற்கு வங்காளத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இச்சட்டத்துக்கு எதிராகப் பேரணி நடத்திவருகிறார். முதல் நாளான நேற்று நடந்த பேரணியில், “என் உயிரே போனாலும் குடியுரிமைச் சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டோம்” என்று கூறினார்.

  Mamata bannerji attacked PM Modi on NAA speech
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. மேற்கு வங்காளத்தின் ஜாதவ்பூரில் இருந்து ஜாதுபாபு பஜார் வரை இந்தப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மிமி சக்ரவர்த்தி, நஸ்ரத் ஜஹான் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாகப் பேரணியைத் தொடங்கி வைத்து மம்தா பேசுகையில், “ஒருவருடைய உடையை வைத்து அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று யாராவது கூறமுடியுமா? ஒருவர் அணிந்திருக்கும் தொப்பியை வைத்து அவர்களின் கருத்தை உங்களால் யோசிக்க முடியுமா?

Mamata bannerji attacked PM Modi on NAA speech
ஒருவரின் ஆடைகளைப் பார்த்து நீங்கள் அவர்களின் அரசியலை புரிந்துகொள்ள முடியுமா? என்னால் அப்படியெல்லாம் சிந்திக்க முடியவில்லை. இன்னும் சில நாட்களில் கழுத்தில் அணியும் துண்டு காவி நிறமாக இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.” என மம்தா பேசினார். ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “வன்முறை செய்வோரை அவர்களது உடைகளை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம்” என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சுக்குக் பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios