Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் வீட்டை காலி பண்ணல குடிநீர், மின்சாரம் கட்.... முன்னாள் எம்.பி.க்களுக்கு மத்திய அரசு பைனல் வார்னிங்!

புதிய எம்.பி.க்களில் 250 பேர் டெல்லி வெஸ்டர்ன் கோர்ட் பகுதியில் உள்ள தற்காலிக தங்கும் இடங்களிலும், விருந்தினர் மாளிகைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  ஒரு வாரத்துக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய அரசு கெடு விதித்துள்ளது.
 

Lokshaba commity warns ex mp
Author
Delhi, First Published Aug 19, 2019, 10:39 PM IST

ஒரு வாரத்துக்குள் அரசு பங்களாவை விட்டு காலி செய்யாவிட்டால், குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்படும் என முன்னாள் எம்.பி.களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Lokshaba commity warns ex mp
2014 முதல் 2019 வரை எம்.பி.களாக இருந்த எம்.பி.க்களில் 200-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் வழங்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்யவில்லை. மக்களவை கலைக்கப்பட்டுவிட்டால், அந்தத் தேதியிலிருந்து ஒரு மாதத்துக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது விதி. 16-வது மக்களவையைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மே மாதம் 25-ம் தேதி கலைத்தார். அதன்படி ஜூன் 25-ம் தேதிக்குள் முன்னாள் எம்.பி.க்கள் தங்கள் பங்களாவை காலி செய்திருக்க வேண்டும். ஆனால், காலக்கெடு முடிந்து 2 மாதங்கள் முடிந்தும் இன்னும் 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்களாக்களை காலி செய்யவில்லை.Lokshaba commity warns ex mp
இதனால், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.களுக்கு அரசு பங்களாவை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய எம்.பி.க்களில் 250 பேர் டெல்லி வெஸ்டர்ன் கோர்ட் பகுதியில் உள்ள தற்காலிக தங்கும் இடங்களிலும், விருந்தினர் மாளிகைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  ஒரு வாரத்துக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய அரசு கெடு விதித்துள்ளது.Lokshaba commity warns ex mp
இதுகுறித்து மக்களவை கமிட்டி முன்னாள் எம்.பி.களுக்கு விடுத்துள்ள உத்தரவில், “இன்னும் ஒரு வாரத்துக்குள் அரசு பங்களாவை காலி செய்யாவிட்டால், குடிநீர், மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவை துண்டிக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பிறகாவது முன்னாள் எம்.பி.க்கள் அரசு பங்களாவை விட்டு செல்வார்களா என்று உறுதியாகத் தெரியவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios