Asianet News TamilAsianet News Tamil

அண்ணா அறிவாலயத்தில் மலை போல் குவிந்திருக்கும் புகார்கள்..!! ஆக்சனுக்காக காத்திருக்கும் உடன்பிறப்புகள்...!!

கடந்த ஓராண்டில் மட்டும் திமுக வில் உள்ளவர்கள் தலைமைக்கு அனுப்பிய புகார் கடிதங்கள் எவ்வளவு என்று தெரியுமா? கேட்டாலே தலை சுற்றுகிறது. ஒரு லட்சத்து இருபத்து மூன்றாயிரம் புகார்கள்  மலை போல் குவிந்து கிடைக்கின்றன..

Like the mountain in Anna Enlightenment Focused complaints .. !! Administrators waiting for Axon ... !!
Author
Tamil Nadu, First Published Feb 3, 2020, 6:21 AM IST

Like the mountain in Anna Enlightenment Focused complaints .. !! Administrators waiting for Axon ... !!

அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள் அனுப்பிய புகார் கடிதங்கள் மலை போல் குவிந்து கிடக்கிறதாம். இதுவரைக்கு சுமார் 1லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருக்கிறதாம். அத்தனை புகார்களையும் எப்படி விசாரிக்க போகிறார் தீர்வு சொல்லப்போகிறார்; புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மைச் செயலாளர் நேரு என்று கட்சி நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
திமுக வின் முதன்மைச் செயலாளராக கே.என் நேரு கடந்த 26ம் தேதி திமுக தலைமைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டார். இந்த பதவியான டி.ஆர் பாலு வசம் இருந்தது. அதை அவரிடம் இருந்து பிடுங்கி நேருவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கடுப்பில் டிஆர் பாலு முதன்மைச் செயலாளருக்கான அறையை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

Like the mountain in Anna Enlightenment Focused complaints .. !! Administrators waiting for Axon ... !!
இந்த நிலையில் நேருவை முறைப்படி முதன்மைச்செயலாளராக அமர வைக்கும் வைபவத்தை நடத்தினார் ஸ்டாலின். இந்த நிகழ்வில் கட்சியின் பொருளாளர் துரை முருகன் அமைப்புச் செயலளர் ஆர்எஸ் பாரதி இளைஞர்அணிச் செயலாளர் உதயநிதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். டிஆர் பாலு கொஞ்ச நேரத்திலேயே அங்கே இருந்து கிளம்பிவிட்டாராம்.
முதன்மைச் செயலாளர் பணி திமுகவில் முக்கியமான பணி தான். கட்சியின் மாவட்டச் செயலளர்கள் மீது வரும் புகார்கள் குறித்து உரிய நபர்களை அழைத்தும் மாவட்டச் செயலாளர்களை அழைத்தும் விசாரித்து தலைவருக்கு அறிக்கை கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தலைக்குமேல் தாங்கி இருக்கிறது.

Like the mountain in Anna Enlightenment Focused complaints .. !! Administrators waiting for Axon ... !!
கடந்த ஓராண்டில் மட்டும் திமுக வில் உள்ளவர்கள் தலைமைக்கு அனுப்பிய புகார் கடிதங்கள் எவ்வளவு என்று தெரியுமா? கேட்டாலே தலை சுற்றுகிறது. ஒரு லட்சத்து இருபத்து மூன்றாயிரம் புகார்கள்  மலை போல் குவிந்து கிடைக்கின்றன.. அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அல்லது விசாரணை நடத்தியிருக்க வேண்டும். எந்த புகாருக்கும் யாரையும் அழைத்து விசாரிக்காமல் வந்த புகார்களையெல்லாம் குப்பை தொட்டில் போட்டது போல் வைத்து;க்கொண்டார் டிஆர் பாலு. இதையெல்லாம் பார்த்த தலைவர் சுறுசுறுப்பாக ஓர் ஆள் முதன்மைச் செயலாளராக இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் இருக்காது . கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே என்ன செய்கிறார்கள். யார் தவறு செய்கிறார்கள் என்பதை தலைவர் கவனத்துக் வந்துவிடும் என்பதற்காக தான் நேருவை தேர்ந்தெடுத்தார் ஸ்டாலின் என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

TBalamurukan

Follow Us:
Download App:
  • android
  • ios