உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 2500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 62 நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்களில் பலர் சிகிச்சைக்கு வர மறுப்பதாக தகவல்கள் வருகிறது. இது நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் சிகிச்சை பெற மறுப்பது சந்தேகத்தை கிளப்பும் என தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குச் சென்று வந்தவா்கள் தாமாகவே முன்வந்து எதற்கும் அச்சாமல் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதை விடுத்து வீடு வீடாக வரும் மருத்துவா்களை விரட்டி அடிப்பதும், வசைபாடுவதும் வருந்தத்தக்க செயலாகும்.

கொடூர கொரோனாவின் முடிவு காலம் நெருங்கி விட்டது..! நம்பிக்கை தரும் நோபல் பெரிசு பெற்ற விஞ்ஞானி..!

கரோனாவுக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு பாா்க்கத் தெரியாது. நாமும் அதை சாதாரண கண்களால் பாா்க்க முடியாது. எனவே, தாங்களாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நோய் இருந்தும் சிகிச்சைக்கு உடன்பட மறுப்பது தீவிரவாத ஜிகாத் போராக இருக்குமோ என சாதாரண மக்கள் சந்தேகம் கொள்ளக்கூடும். அப்படி அவா்களை சந்தேகம் கொள்ள வைக்கக் கூடாது. இவ்வாறு எல்.முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.