“உன்னால முடிஞ்சா தொட்டுப் பாரு...” சசி புருஷனுக்கு கிருஷ்ணப்ரியா சவால்...
தம்மை கன்னத்தில் அறைவேன் என கூறிய சசிகலா கணவர் நடராஜனுக்கு முயல முற்படட்டும் முதலில் என இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா சவால் விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப்பின் ஒட்டுமொத்த அரசியல் தலைகள் முதல் பொதுமக்கள் வரை ஜெயலலிதாவிற்கு என்ன ஆச்சு? என எல்லோருக்கும் குழப்பமானது. இந்நிலையில், சுமார் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில், தங்களிடம் வீடியோ இருக்கிறது தேவைப்படும்போது வெளியிடுவோம் என சசி குடும்பத்தினர் கூறியிருந்தனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைதேர்தல் நேரத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார் வெற்றிவேல். ஜெயலலிதா சிகிச்சை பெரும் அதிர்வை உண்டாக்கியது. இந்த வீடியோ விவகாரத்தில் தினகரன், வெற்றிவேல் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார் கிருஷ்ணப்பிரியா.
இதனிடையே, உடல்நலம் தேறி இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார், அதில் ஜெயலலிதா வீடியோ விவகாரம் குறித்து பேசும்போது, கிருஷ்ணப்பிரியாவின் கன்னத்தில் அறைவேன் என நடராஜன் கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, ஒரு பெண் என்று பார்க்காமல் கிருஷ்ணப்பிரியாவை கன்னத்தில் அறைவேன் என நடராஜன் கூறுகிறார்.. அப்படியானால் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் நடராஜனை எதனால் அடிப்பது? பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தமது முகநூலில் சிறு பிள்ளைகளுக்கு கூட மரியாதை அளிக்கப்படவேண்டும் என்ற கருத்துடையவள் நான். 37 வது வயதிலும், திருமணம் முடித்து 18 ஆண்டுகளும், வயது வந்த குழந்தைகளுக்கு தாயுமாகவும் இருக்கும் ஒரு பெண்னை, பெண் என்றும் பாராமல், ஊடகத்தில் , " கன்னதில் அறைவேன் " என்று கூறுகிறார் பெரியவர் ,என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர். முயல முற்படட்டும் முதலில்.. என பதிவிட்டுள்ளார் நடராஜனுக்கு சவால்விட்டு பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.
தனது மற்றொரு பதிவில், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனவும் நடராஜனுக்கு எதிராக கொந்தளித்திருக்கிறார் கிருஷ்ணப்பிரியா.