வாட்ஸ் அப்பில் சிறுமிகளை வைத்து ஆபாசப்படங்களை வெளியிட்டு வந்த 119 பேர் கொண்ட பெரிய கும்பல் சிபிஐ வலையில் சிக்கியுள்ளது. இந்தக் கும்பலின் நிர்வாகியாகக் கருதப்படும் நிகில் வர்மா என்பவரை  சிபிஐ கைது செய்துள்ளது.

பாலியல் ரீதியில் வக்கிர புத்தி உள்ளவர்களிடம் குழந்தைகளின் ஆபாச வீடியோ படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு சர்வதேச அளவில் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி நடத்தி வந்து உள்ளார்.  உத்தர பிரதேச மாநிலம்  கன்னவ்ஜைச் சேர்ந்த நிகில் வர்மா என்ற  பி.காம் பட்டப்படிப்பு முடித்த வேலையில்லாமல் இருந்துள்ளார்..

இந்த வாட்ஸ் அப் குரூப்பின் பிற நிர்வாகிகள் என்று சந்தேகிக்கப்படும் மும்பையைச் சத்யேந்திர சவுகான் , டெல்லியைச் சேர்ந்த  நபீஸ் ரஸா மற்றும் சாகித் , ஆதர்ஷ் ஆகியோரும் சிபிஐ வலையில் சிக்கியுள்ளனர்.

கிட்ஸ் டிரிபிள் எக்ஸ் என்ற பெயரில் சிறார்களை வைத்து ஆபாசப் படங்களை வெளியிட்டு வந்துள்ளனர். இலங்கை, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, மெக்சிகோ, நியூஸிலாந்து, சீனா, நைஜீரியா, பிரேசில், கென்யா ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த வாட்ஸாப் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் குறித்த தகவலும் அந்தந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டு இவர்கள் மீது நடவடிக்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ சந்தேக நபர்களை அடையாளம் கண்டு டெல்லி, உ.பி, மும்பை, ஆகிய இடங்களில் கடும் சோதனைகளை மேற்கொண்டது. இந்த ஆபாசப் படங்களை வெளியிட்டு இதற்காக கட்டணங்கள் எதையும் வசூலித்தனரா என்பதையும் சிபிஐ விசாரித்து வருகிறது