Asianet News TamilAsianet News Tamil

சிஏஏ-வுக்கு எதிராக கேரள அரசு தீர்மானம் செல்லாது... மாநில ஆளுநர் அதிரடி அறிவிப்பு... கேரள அரசுக்கு குட்டு!

"இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரிவினை நிகழ்ந்தபோது எந்த தென் மாநிலங்களும் பாதிக்கப்படவில்லை. தற்போது கேரளாவில் சட்டவிரோத அகதிகள் என யாருமே இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தால் கேரளாவுக்கு எந்தப் பாதிப்பும் பிரச்னையும் இல்லை. இந்த சூழ்நிலையில் இதை ஏன் பிரச்னையாக்குகிறார்கள் என்று புரியவில்லை.” என்று  ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். 

Kerala Governor reaction on kerala governement passed resolution against caa
Author
Kerala, First Published Jan 3, 2020, 10:00 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவை இயற்றிய தீர்மானம் சட்டப்பூர்வமானது அல்ல என்று மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான்  தெரிவித்துள்ளார். Kerala Governor reaction on kerala governement passed resolution against caa
கேரள ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்துவருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து போராட்டத்தை கேரளாவில் நடத்தின. இந்நிலையில் கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக மாநில அரசுகள் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார். அதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக பதிலடி கொடுத்திருந்தார்.Kerala Governor reaction on kerala governement passed resolution against caa
 இந்நிலையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், “கேரள அரசின் தீர்மானம் சட்டப்பூர்வமானது அல்ல” என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் அரசியல் சாசனப்படி செல்லாது. குடியுரிமை வழங்கும் விவகாரம் என்பது மத்திய அரசின் உள்ளது. இதில், மாநில அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது. Kerala Governor reaction on kerala governement passed resolution against caa
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரிவினை நிகழ்ந்தபோது எந்த தென் மாநிலங்களும் பாதிக்கப்படவில்லை. தற்போது கேரளாவில் சட்டவிரோத அகதிகள் என யாருமே இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தால் கேரளாவுக்கு எந்தப் பாதிப்பும் பிரச்னையும் இல்லை. இந்த சூழ்நிலையில் இதை ஏன் பிரச்னையாக்குகிறார்கள் என்று புரியவில்லை.” என்று  ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios