Asianet News TamilAsianet News Tamil

தலித், இஸ்லாமியர்களை அவமானப்படுத்தும் கேள்வி ! சர்ச்சைக்குரிய கேள்வித் தாளை நாங்க ரெடி பண்ணல ! எஸ்கேப்பாகும் கேந்திரிய வித்யாலாயா !!

சர்ச்சைக்குரிய ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாட கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை என்று கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

kendriya vidyalaya question
Author
Delhi, First Published Sep 7, 2019, 10:37 PM IST

இந்திய அரசமைப்பு சட்டத்தைத் தயாரித்து, நாட்டு மக்களுக்கு வழங்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை இழிவு படுத்துகிற வகையிலும், அதேபோல், தலித் என்றால் யார் என்ற கேள்விக்கு 'தீண்டத்தகாதவர்'; என்று பதில் கூறுகிற வகையிலும், அத்துடன் சிறுபான்மை சமுதாய மக்களான முஸ்லிம்களை அவமதிக்கின்ற வகையிலும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும் ஆறாம் வகுப்பு கேள்வித்தாள் ஒன்று சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக உலா வந்தது. 

அந்த கேள்வித்தாளானது கேந்த்ரியா வித்யாலயா பள்ளியில் உருவாக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவி வந்தன.   

kendriya vidyalaya question

இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாட கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை என்று கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  
 
இதுதொடர்பாக சென்னையில் உள்ள கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , முஸ்லீம்கள் குறித்தும் பட்டியல் இனத்தவர் குறித்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாளில் தவறாக சித்தரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

kendriya vidyalaya question

மேலும் சர்ச்சைக்குரிய கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை. எனவே சமூக வலைத்தளவாசிகள் போலியான கேள்வித்தாளை பரப்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios