கே.சி.பழனிசாமி அதிரடி கைது..! 11  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..! அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு...!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பியான கே சி பழனிச்சாமி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் ஆர்எஸ் புரம் பகுதியில் வசித்து வந்த கேசி பழனிசாமி வீட்டிற்கு இன்று காலை திடீரென சென்ற கருமத்தம்பட்டி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்து கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். 

அப்போது பேசிய அவர், "தன்னை அதிமுகவில் சேர்த்துக்கொண்டதாக கூறி வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து என்னை கைது செய்துள்ளனர்" என தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவராக உள்ள கந்தவேல் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூலூர் போலீசார் கைது செய்து உள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் இரட்டை இலைச் சின்னத்தை பயன்படுத்தி வந்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் சமீபத்தில் முதல்வரை சந்தித்துப் பேசியிருந்தார் கே சி பழனிச்சாமி. அப்போது மீண்டும் அவர் கட்சியில் இணைக்க படலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது. இருந்தபோதிலும் இப்படி ஒரு தருணத்தில் திடீரென அவர் கைது செய்யப்பட்டு உள்ளது அரசியல் வட்டாரத்தில் மேலும் ஒரு விதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.