Asianet News TamilAsianet News Tamil

நீங்கள் ஜெயிலுக்கு போன பிறகு என்னென நடந்தது தெரியுமா..? அப்பாவிற்கு கடிதம் அனுப்பிய கார்த்தி சிதம்பரம்..!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 74ஆவது பிறந்தநாளில் அவர் திஹார் சிறையில் இருப்பது அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

karti writes letter to chidambaram birthday
Author
Tamil Nadu, First Published Sep 16, 2019, 11:26 AM IST

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 74ஆவது பிறந்தநாளில் அவர் திஹார் சிறையில் இருப்பது அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. karti writes letter to chidambaram birthday

இந்நிலையில் சிறையில் இருக்கும் தனது தந்தை ப.சிதம்பரத்திற்கு அவரது பிறந்தநாளையொட்டி கார்த்தி சிதம்பரம் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

2 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நடந்த பல்வேறு நிகழ்வுகளை விளக்கியதுடன், பாஜக அரசின் 100 நாள் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பளவை சுட்டிக் காட்டியும் விமர்சித்துள்ளார். (முன்பு `பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது, `தான் 56 அங்குல மார்பு உடையவர் என்பதை மோடி காட்டியுள்ளார்’ என்று அமித் ஷா பேசியிருந்தார்) karti writes letter to chidambaram birthday

உங்களுக்கு 74 வயது ஆகிறது. உங்களை 56 என்றும் தடுக்க முடியாது. வீட்டில் நீங்கள் இல்லாதது எங்களின் இதயத்தை நொறுக்கி உள்ளது. வீடு திரும்பும்போது கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடலாம். தங்களின் வயதான 74ஐ ஒப்பிடுகையில் 100 ஒன்றும் பெரிதல்ல. நீங்கள் சிறைக்கு சென்ற பிறகு ப.சிதம்பரம் சிறைக்குச் சென்ற பின்பு நடந்த விஷயங்களான அமைச்சர் பியூஷ் கோயலின் பொருளாதார மந்த நிலை பற்றிய விளக்கம் (நியூட்டன், ஐன்ஸ்டீன் குழப்பம்), அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் பத்திரிகையாளர் சந்திப்பு, காஷ்மீர் ஆப்பிள்களை மத்திய அரசு கொள்முதல் செய்தது.

karti writes letter to chidambaram birthday

ஹாங்காங் போராட்டம், ரஃபேல் நடாலின் வெற்றி போன்ற பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் நாடகத்திற்கு எதிராக உண்மையின் துணையுடன் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டா போல் வெளிவருவீர்கள். உண்மையின் வெற்றிக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios