ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தால் வராவிட்டாலும் மதுபான கடைகளை திறக்க கர்நாடக மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ,  மது கிடைக்காததால் மது போதைக்கு அடிமையான பலர் தற்கொலைக்கு ஆளாகி வருவதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என கர்நாடக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  இந்தியாவில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது  இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. இதனால்  இந்தியாவில் தேசிய  ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு  வருகிறது.  மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை உறுதி செய்து வருகின்றன. 

எனவே  மதுபான கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது ,  கடந்த 10 தினங்களுக்கு மேலாக மது கிடைக்காததால் மதுவுக்கு அடிமையானவர்கள்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன் மதுபான கடைகளை உடைத்து மது திருட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர் கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது மது பாட்டில்களை கொள்ளையடிக்கும் சம்பவர்கள் அரங்கேறி வருவதாக தெரிவிக்கும் கலால் துறை அதிகாரிகள் ,  மதுக்கடைகளை திறக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.  ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டாலும் கூட  காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மதுபான விற்பனையை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளது இதற்கான இறுதி முடிவை முதல்வர் எடுப்பார் என தெரிகிறது .  

பிரதமர் மோடி அறிவித்த  ஊரடங்கு உத்தரவை நடைமுறை வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே அதாவது மார்ச்  21ஆம் தேதி கர்நாடக அரசு மது விற்பனையை  தடை செய்தது , அதாவது  மதுவால் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமான கர்நாடகாவில் 2019 - 20 ஆண்டிற்கான  வருவாயின் படி அரசாங்கம் ஒரு மாதத்திற்கு 1,700 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  நடப்பாண்டு வரவு-செலவுத் திட்டத்தின் படி அரசாங்கம் 22 ஆயிரத்து 700 கோடியை மது விற்பனை மூலமே ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.  இந்நிலையில்  ஊரடங்கு உத்தரவால் 450 கோடி மட்டுமே வருமானம் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கிறது .  அதாவது கர்நாடகத்தில் வருமானம் ஈட்டும் நான்கு துறைகளில் மதுபானம் அதிக லாபத்தை ஈட்டி தருகிறது இந்நிலையில் தற்போது  உள்ள நிதி நெருக்கடியில்  மது விற்பனை தொடங்கினால் மட்டுமே மாநில தேவைகளை சமாளிக்க முடியும் என்ற முடிவுக்கு எடியூரப்பா வந்துள்ளதால் தற்போது இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளதாக தெரிகிறது.