Asianet News TamilAsianet News Tamil

கனிமொழியின் கடும் கோபம்: நாட்டை விட்டு வெளியே போ!

காங்கிரஸ் கட்சிக்கு தலைமை வகிப்பது யார்? என்பது கேள்விக்குறியாக இருப்பது கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. தலைமை பதவிக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதுடன், வாக்காளர்களின் மதிப்பையும் பெறும். 

Kanimozhi slaps : Quit India immediately
Author
Chennai, First Published Feb 22, 2020, 6:11 PM IST

*    ’தேசம், தேசியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள். ஆனால், தேசியவாதம் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்த வேண்டாம். அது பொதுவுடமை கொள்கைக்கு எதிரானதாக இங்கு அர்த்தப்படுத்திக் கொள்ளப்படும்.’ என ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் என்னிடம் கூறினார். சில வார்த்தைகளுக்கு, சில இடங்களில், வேறு அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 
-    மோகன் பாகவத் (ஆர்.எஸ்.எஸ்.தலைவர்)

*    மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான போக்கை கையில் எடுத்துள்ளது. பயிர்காப்பீடு கட்டாயமில்லை எனும் அறிவிப்பின் மூலம் பல லட்சம் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். பா.ஜ.க.வின் குறுகிய பார்வையும், அக்கறையின்மையும் இந்த விஷயத்தில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 
-    ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.)

*    காங்கிரஸ் கட்சிக்கு தலைமை வகிப்பது யார்? என்பது கேள்விக்குறியாக இருப்பது கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. தலைமை பதவிக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதுடன், வாக்காளர்களின் மதிப்பையும் பெறும். 
-    சசி தரூர் (காங்கிரஸ் எம்.பி.)

*    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேர்ந்த குரூர விபத்தில் உயிர்கள் பறிபோன சம்பவம் அதிர்ச்சியடைய வைக்கிறது. இது போன்ற விபத்துகள் இனிமேல் நடக்காமல் இருக்க, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக, முறையாக, சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். சாலை போக்குவரத்தில் விதிகளை கடைப்பிடிக்காத நபர்கள் மீது மிக கடுமையான சட்டத்தின் வாயிலாக, அதிகபட்ச தண்டனை கொடுத்தால்தான் விபத்து நடப்பதை தடுக்க  முடியும். 
-    ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்)

*    சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் விபத்து நடக்கிறது. விபத்துக்கு ஏழை பணக்காரன் தெரியாது. விபத்து நடந்த அந்த அறையில் நானும் இருந்திருக்க வேண்டும். நூலிழையில் நான் உயிர் தப்பினேன். இயக்குநர், கேமெராமேன், காஜல் அகர்வால் மற்றும் நான் உட்பட அனைவரும் நான்கு வினாடிகளுக்கு முன்புதான் சம்பவம் நடந்த கூடாரத்தில் இருந்து நகர்ந்து சென்றோம். 
-    கமல்ஹாசன் (ம.நீ.ம. தலைவர்)

*    நாங்கள் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆளுங்கட்சிக்கு உள்ள அதே உணர்வு எங்களுக்கும் உள்ளது.  டெல்டாவை மாவட்டங்களை ‘சிறப்பு வேளாண் மண்டலங்களாக்கும்’ சட்ட விஷயத்தில் விவசாயிகள் மற்றும் வல்லுநர்களை அழைத்துக் கருத்துக் கேட்பதற்கு, தேர்வு குழுவிற்கு அனுப்பலாம். தேர்வு குழுவிற்கு ஒரு மாதம், மூன்று மாதம் நேரம் கொடுத்து, முடிக்கும்படி கூறலாம். 
-    துரைமுருகன் (தி.மு.க. பொருளாளர்)

*    தேசிய மக்கள்தொகை பதிவேட்டில், மக்கள் கொண்டாடும் பண்டிகை குறித்து எந்தக் கேள்வியும் இல்லை. எதிர்க்கட்சி தலைவரும், துணைத் தலைவரும், மக்களுக்காக பாடுபடுகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக, ஓட்டு வங்கியை மையாக வைத்து மக்கள் மனதில் விஷ விதைகளை தூவ வேண்டாம். 
-    ஆர்.பி.உதயகுமார் ( வருவாய்த்துறை அமைச்சர்)

*    சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி. தமிழ், தமிழர்களால் மட்டும் பேசப்படும் மொழி. எனவே தமிழைக் காட்டிலும், சமஸ்கிருதத்திற்கு  மத்தியரசு அதிக நிதி ஒதுக்கி இருப்பதாக தெரிகிறது. 
-    இல.கணேசன் (பா.ஜ.க. மூத்த தலைவர்)

*    மத்திய பா.ஜ.க. அரசு எழுதிக் கொடுத்த வசனங்களை, முதல்வர் இ.பி.எஸ். சட்டசபையில் அப்படியே வாசிக்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானதல்ல, ஹிந்துக்களுக்கும் எதிரானது. இந்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். 
-    ஜவாஹிருல்லாஹ் (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்)

*    முன் எப்போதும் இல்லாத வகையில், இப்போதெல்லாம் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ‘பாகிஸ்தானுக்கு போ’ என்று திட்டுவது அதிகரித்துள்ளது. மத்திய அரசை விமர்சிப்பவர்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போக வேண்டும்? அப்படி சொல்பவர்கள்தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள்தான் இங்கு வசிக்கும் உரிமையை இழந்துவிட்டனர். 
-    கனிமொழி (தி.மு.க. எம்.பி.)

*    ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்ற ஹிந்து அமைப்பின் துணை நிறுவனமான, அட்சயபாத்ரா, சென்னை நகர அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க உள்ளது. அதில் பூண்டு, வெங்காயம் இடம் பெறாதாம். இது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பு. 
-    கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

Follow Us:
Download App:
  • android
  • ios