Asianet News TamilAsianet News Tamil

எம்.பி. பதவியை ராஜினாமா செய்த கனிமொழி... அமித் ஷா, ரவிசங்கர் பிரசாத்தும் ராஜினாமா!

தற்போது மக்களவை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டிருப்பதால், அந்தப் பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கனிமொழி ராஜினாமா செய்தார். 

Kanimozhi resign her MP post from rajya shaba
Author
Delhi, First Published May 30, 2019, 8:47 AM IST

  நாடாளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அமித்ஷா, கனிமொழி ஆகியோர் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அவர்களுடைய ராஜினாமாவை குடியரசு துணை தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு ஏற்றுக்கொண்டுள்ளார்.

Kanimozhi resign her MP post from rajya shaba
 திமுகவைச் சேர்ந்த கனிமொழி, தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் அவர் அமோகமாக வெற்றி பெற்றார். கனிமொழி ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பதவி காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.

Kanimozhi resign her MP post from rajya shaba
தற்போது மக்களவை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டிருப்பதால், அந்தப் பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கனிமொழி ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணை தலைவருமான வெங்கய்யா நாயுடு ஏற்றுக்கொண்டுள்ளார்.Kanimozhi resign her MP post from rajya shaba
கனிமொழியைபோல மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலும் ரவிசங்கர் பிரசாத் பாட்னா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். அவர்களும் தங்களுடைய மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார்கள். அவர்களுடைய ராஜினாமாவையும் வெங்கய்யா நாயுடு ஏற்றுக்கொண்டுள்ளார். அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இராணியும் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், அவரும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

Follow Us:
Download App:
  • android
  • ios