Asianet News TamilAsianet News Tamil

ஆட்டம் கண்டது கமல்நாத் ஆட்சி..!! பின்னணியில் இருப்பது காங்கிரஸா..? பாஜகா..? குழப்பத்தில் கமல்நாத்..!

மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் கட்சித் தலைவராக அம்மாநில முதல்வர் கமல்நாத் இருக்கிறார். இந்த பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனை வெடித்திருக்கிறது,அதே நேரத்தில் அங்கு சிஏஏ சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதில் பாஜக ஆட்சியை கலைக்க திட்டமிட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

Kamalnath's reign .. Congress in the background? Pajaka ..? Kamalnath in confusion ..!
Author
Madhya Pradesh, First Published Mar 10, 2020, 7:51 AM IST

T.Balamurukan

மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் கட்சித் தலைவராக அம்மாநில முதல்வர் கமல்நாத் இருக்கிறார். இந்த பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனை வெடித்திருக்கிறது,அதே நேரத்தில் அங்கு சிஏஏ சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதில் பாஜக ஆட்சியை கலைக்க திட்டமிட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

Kamalnath's reign .. Congress in the background? Pajaka ..? Kamalnath in confusion ..!

232 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை மத்திய பிரதேசம். தற்போது 2 இடங்கள் காலியாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். 4 சுயேச்சைகளும், 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களும், ஒரு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. வும் உள்ளனர்.

மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.அங்கு 3 மாநிலங்களவை காலியிடங்களுக்கு 26-ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த வாரம் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக பேச்சு எழுந்தது. ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அவர்களை கடத்தி, அரியானா மாநிலத்தில் ஒரு ஓட்டலில் அடைத்து வைத்துள்ளதாக பா.ஜனதா மீது, காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால், பாஜக இதை மறுத்தது. பின்னர், 8 எம்.எல்.ஏ.க்களும் திரும்பி வந்து, கமல்நாத் அரசுக்கு ஆதரவை தெரிவித்ததால், இப்பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது.

Kamalnath's reign .. Congress in the background? Pajaka ..? Kamalnath in confusion ..!

 நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவையும், அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் காணவில்லை. சிந்தியாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. இதுபோல், 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவே இருப்பதாக தெரிகிறது.இவர்களில், சிந்தியாவின் ஆதரவாளர்களாக இருக்கும் 6 மந்திரிகளும் அடக்கம். அவர்களின் செல்போன் சுவிட்ஸ் ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்தது. 17 பேரும் பெங்களூருக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.

Kamalnath's reign .. Congress in the background? Pajaka ..? Kamalnath in confusion ..!

 மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் முதலமைச்சர் கமல்நாத்தே நீடித்து வருகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா காய் நகர்த்தி வருகிறார். இதுதொடர்பாக அவருக்கும், கமல்நாத்துக்கும் இடையே மோதல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில், சிந்தியாவும், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க் களும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios