அரசியலுக்காக இதை செய்யவில்லை...அரசியலை பயன்படுத்தி இதை செய்ய விரும்புகிறேன்...அடித்து கூறும் கமல்!
நடிகர் கமலஹாசன் அரசியல் பிரவேசம் மெல்ல மெல்ல வெளிப்பட துவங்கியுள்ளது. மேலும் இன்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் முக்கிய அறிவிப்பும் வெளிவரலாம்.
இந்நிலையில் கமல் இன்று தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளுர் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசினார்.
அப்போது இது போன்று 550 முறை இலவச மருத்துவ முகாம்கள் அமைத்து உதவியுள்ளதாகவும். இது அரசியல் நோக்கத்தோடு செய்யவில்லை என ஆணி தனமாக கூறினார்.
மேலும் இதை வைத்து அரசியலுக்கு வர நினைக்கவில்லை. இதை செய்வதற்க்காக அரசியலுக்கு வர நினைப்பதாக தெரிவிதார்.
தொடர்ந்து பேசிய கமல்...எங்கள் பணிகள் அமைதியாக நடந்து வருகின்றது என்றும் , முடிந்தவரை உதவ வேண்டும் என்பதற்காக மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறோம். மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.
கமல் பேசிய விடியோ தொகுப்பு...