ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவியை அவரின் உறவுக்காரர் ஒருவர் ஏழு மாத கர்ப்பிணியாக்கிய கொடூரமான சம்பவம் அந்த கிராமத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. .

தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே மஹ்புபாபாத் மாவட்டத்தில் குரிவி மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் அந்த மாணவி வீட்டிலேயே தங்கி படித்து வருகிறார் .இந்நிலையில் அவரின் 35 வயதான உறவுக்காரர் ஒருவர் அந்த தெருவிலேயே கல்யாணமாகி குழந்தைகளுடன் வசித்து வருகிறார் .


அவருக்கு அந்த 13 வயது ஏழாவது படிக்கும் மாணவி மீது ஒரு கண் .அதனால் அந்த மாணவி தனியாக வீட்டிலிருக்கும்போது அடிக்கடி அவரிடம் வந்து ஆசை வார்த்தைகள் கூறுவார் .பல கிப்ட்டுகள் வாங்கி வந்து கொடுப்பாராம். .அதனால் அந்த மாணவி அவரின் ஆசை வார்த்தையில் மயங்கியுள்ளார். இரவு நேரங்களில் அந்த மாணவியை அந்த வீட்டின் அருகே இருக்கும் ஒரு தனிமையான இடத்திற்கு அடிக்கடி வரவைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் அந்த மாணவி ஏழு மாதம் கர்ப்பினியாகியுள்ளார் .அதுகூட தெரியாமல் அந்த பெண்ணிடம் அவர் பல மாதங்களாக பாலியல் விளையாட்டு விளையாடியுள்ளார்.

ஒரு நாள் அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .அதனால் அந்த பெண்ணை அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்கள் அவரது குடும்பத்தினர்.அப்போது அந்த பெண்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த பெண் ஏழு மாத கர்ப்பமாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள் .அப்போது அந்த பெண்ணிடம் இது பற்றி கேட்ட போது அவர் தன்னுடைய உறவுக்காரரின் லீலைகளை கூறினார் .போலீசார் அந்த வாலிபரை பிடித்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கம்பி எண்ண வைத்திருக்கிறார்கள்.