டீ, பண் சாப்பிட்டாரா ஜெயலலிதா! சசிகலா ஊட்டிவிட்டாரா? டிசம்பர் 4  அன்று என்ன நடந்தது? கசிந்தது தகவல்...

Jayalalithaa died at 5.15pm on Dec 4 and not on Dec 5
First Published Jan 18, 2018, 10:15 AM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



டிசம்பர் 4  வரை அம்மா நலமுடன் உள்ளார் . டிசம்பர் 4  அன்று காலை தக்காளி சாதம் கொடுக்கப்படுகிறது. அதை சசிகலா ஊட்டி விருகிறார் என சமூக வலைதளங்களில் ஒரு பதிவு கிடைத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவற்றை விசாரிப்பதற்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மன்னார்குடியில் நேற்று தினகரன் அணியினர் ஏற்பாடு செய்திருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டதகாவும் மருத்துவமனை நிர்வாகத்தின் பாதுகாப்பு கருதியே டிசம்பர் 5ஆம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது சசிகலா ஆதரவாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4  வரை அபல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன? என்று ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 23  , எய்ம்ஸ் மருத்துவர்கள் அம்மாவின் சிகிச்சையை பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள்.  டிசம்பர் 1  அன்றே சின்னம்மா  எய்ம்ஸ் மருத்துவர்களிடம் சொல்கிறார் ... " அக்கா , வீட்டுக்கு போகணும்னு சொல்றாங்க , நீங்க எல்லா டெஸ்ட்களையும் எடுத்துட்டீங்க , இருதய டெஸ்ட் மட்டும் எடுத்துடுங்க , ஆஞ்சியோ வேணும்னா செஞ்சிடுங்கன்னு " ... எய்ம்ஸ் மருத்துவர்களோ இந்த விஷயத்தை அம்மாவிடம் எடுத்துச் சென்று சொல்கிறார்கள் ... இப்போ தான் மற்ற எல்லா டெஸ்ட்களையும் எடுத்திருக்கோம் , ஆஞ்சியோ இப்போ வேணாம் அப்பறம் பார்த்துக்கலாம்னு .

அதன் பிறகு டிசம்பர் 4  வரை அம்மா நலமுடன் உள்ளார் . டிசம்பர் 4  அன்று காலை தக்காளி சாதம் கொடுக்கப்படுகிறது , ஒரு ஸ்பூன் தான் உண்கிறார் . மதியம் சின்னமா சொல்கிறார் .... " அக்கா எதுவும் சாப்பிடாம இருந்தா உடம்பில் சத்து கூடாது , ஏதாவது சாப்பிடுங்கனு " ... மதியம் 3 .45  வாக்கில் அம்மா பண் மற்றும் டீ  எடுத்துக்கொள்ள சம்மதிக்கிறார் . சின்னம்மாவே ஊட்டிவிடவேண்டும் என்கிறார் .   " அக்கா , நீங்களே எடுத்து சாப்பிட பழகணும் , நானே எப்பவும் ஊட்டிவிட்ட உங்களுக்கு தெம்பு கூடாதுன்னு  சொல்றாங்க சின்னம்மா ... இல்ல சசி இந்த ஒரு முறை நீ ஊட்டி விடுன்னு அம்மா சொல்ல ... அரை  பண் தான் ஊட்டிவிட்டாங்க  .... போதும்னு அம்மா சொல்ல .

அதே அறையில் எதிரே இருக்கும் வாஸ்பேசினில் சின்னம்மா கை கழுவிட்டிருக்கும் பொழுதே சசின்னு குரல் கேட்க ... திரும்பிப்பார்க்கையில் , அம்மா தனது கால்களை அழுத்தி உதறுகிறார் ....நாக்கும் ஒரு பக்கம் இழுத்துக்கொள்கிறது . எதிரே அமர்ந்திருந்த டூட்டி டாக்டர் உடனே பாய்ந்து சென்று அவருக்கு முதலுதவி கொடுக்கிறார் .   அதன் பிறகு CRITICAL CARE  க்கு அம்மா எடுத்துச் செல்லப்படுகிறார் . இது தான் நடந்தது . இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.