Asianet News TamilAsianet News Tamil

அடுத்தடுத்து அமைச்சர்களின் பி.ஏ க்கள் மரணம்..! விரட்டுகிறதா ஆவி..?

நீங்கள் உங்கள் கழக தாயின் மனதை புண்படுத்தியும், துன்புறுத்தியும் உள்ளீர்கள், அவருக்கு துரோகம் செய்தும் விட்டதாக அவரின் ஆன்மா நினைக்கிறது. அதனால்தான் இப்படி துர் மரணங்களை நிகழ்த்துகிறது. நீங்கள் செய்யும் அத்தனை தவறுகளும், பதுக்கும் பணங்களும் உங்கள் பி.ஏ.க்களுக்கு தெரியும், அவர்கள்தான் உங்கள் தவறுகளின்  பெரிய உடந்தைதாரர்கள் என்பதால் முதலில் அவர்களை பழிவாங்குகிறது அந்த ஆத்மா! 

Jayalalitha's Ghost soul kills minister's PA..?
Author
Tamil Nadu, First Published Jan 18, 2020, 5:48 PM IST

அ.தி.மு.க.வை நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலனாகும். அது, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அக்கட்சியில் வருடத்துக்கு இரண்டு மூன்று துர் மரணங்கள் நிகழ்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை அமைச்சர்களின் உதவியாளர்களாக இருப்பவர்களாகதான் இருக்கின்றன. மிககோரமான விபத்தில் சிக்கி அமைச்சர்களின் பி.ஏ.க்கள் பிய்ந்து போய் இறப்பது தொடர்கதையாகி இருக்கிறது.  இப்போது அ.தி.மு.க. அமைச்சரவை வட்டாரம்  நடுக்கத்தோடு இதைப் பற்றித்தான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறது.  அம்மாவின் ஆவியை சமாதானம் செய்வது எப்படி? என்று பெரும் ஜோஸியர்களிடமும், கேரள மாந்த்ரீகர்களிடமும் ஓடிக் கொண்டிருக்கின்றனர் அமைச்சர்களும், அவர்களின் உதவியாளர்களும் என்று உறுதியாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

Jayalalitha's Ghost soul kills minister's PA..?
பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு வார இதழ் ஒன்று இது பற்றி விரிவான கட்டுரையே வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கும் ஹைலைட் பாயிண்ட்களும், கடந்த மூன்று வருடங்களில் இறந்து போன அமைச்சர்களின் பி.ஏ.க்களின் லிஸ்ட்டும் நடு நடுங்க வைக்கிறது. 
*    ஏதோ ஒன்றிரண்டு பி.ஏ.க்களின் மரணம் நடந்திருந்தால் யதேச்சையாக இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால்  தொடர்ந்து பி.ஏ.க்கள் டார்கெட்டாகுவதுதான் அதிர்ச்சியை தருகிறது. 
1. அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் டிரைவர் சவுந்திரராஜன் 2018ல் திடீரென மாரடைப்பில் இறந்தார், ஆனால் அதை மர்ம மரணம் என்கின்றனர் அவரது உறவினர்கள். காரணம் அவரது முகத்தில் காயங்கள் இருந்ததாம். 
2. அமைச்சர் ஜெயக்குமாரின் நேர்முக உதவியாளரான லோகநாதன் கடந்த 2018 நவம்பரில் கார் விபத்தில் இறந்தார். இவரோடு இவரின் இரண்டு மகன்களும் இறந்தனர்.  
3.    அடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளரான ரமேஷ், 2019 மார்ச் மாதம் சென்னை பாரிமுனையில் ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்து இறந்தார். ஆட்டோ மோதியதால் ஒருவர் இறப்பது மிக அரிதான சம்பவமாக பார்க்கப்பட்டது, அதிர்ச்சியும் அதில் கலந்திருந்தது.

Jayalalitha's Ghost soul kills minister's PA..?
4.    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பி.ஏ.வான மதன், பெரியகுளம் பகுதியில் ஒரு விபத்தில் சிக்கி  இறந்தார். அதன் பின்  பி.ஏ.வாக வந்த அழகு சுப்பிரமணியனும் மதன் பலியான அதே இடத்தில்  விபத்தில் சிக்கி இறந்தார். இந்த விவகாரம் துணை முதல்வரின் குடும்பத்தை பெரும் துயரிலும், பதற்றத்திலும் ஆழ்த்தியது. 
5. இப்போது சமீபத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் பவ் என்கிற வெங்கடேசன், புதுக்கோட்டை அருகில் கார் விபத்தில் டிரைவரோடு சேர்ந்து பலியானார். 
இப்படியாக மூன்றே ஆண்டுகளில்  அமைச்சர்களின் பி.ஏ.க்களும், அவர்களோடு பயணித்தவர்களும் கொத்து கொத்தாக இறந்துள்ளனர்! என்று குறிப்பிட்டுள்ளது அந்த பத்திரிக்கை. 

Jayalalitha's Ghost soul kills minister's PA..?
இச்சூழலில், இதை எண்ணித்தான் பெரும்  அச்சமும், பதற்றமும் அடைந்துள்ளது அமைச்சர்கள் தரப்பு. இதற்காக அவர்கள் நாடிய ஜோதிடர்களோ நீங்கள் உங்கள் கழக தாயின் மனதை புண்படுத்தியும், துன்புறுத்தியும் உள்ளீர்கள், அவருக்கு துரோகம் செய்தும் விட்டதாக அவரின் ஆன்மா நினைக்கிறது. அதனால்தான் இப்படி துர் மரணங்களை நிகழ்த்துகிறது. நீங்கள் செய்யும் அத்தனை தவறுகளும், பதுக்கும் பணங்களும் உங்கள் பி.ஏ.க்களுக்கு தெரியும், அவர்கள்தான் உங்கள் தவறுகளின்  பெரிய உடந்தைதாரர்கள் என்பதால் முதலில் அவர்களை பழிவாங்குகிறது அந்த ஆத்மா! இப்போது அடுத்து யார் பி.ஏ.? என்று கையை பிசைந்து அரண்டு நிற்கிறார்கள் அமைச்சர்கள்.  என்று வர்ணிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். என்னத்த சொல்ல!

Follow Us:
Download App:
  • android
  • ios