தூர்தர்ஷன் டிவி சேனலில் ராமாயணம் தொடர் நேற்று முதல் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு ஒளிபரப்பான இந்த தொடரைப் பார்த்துவிட்டு தன் டுவிட்டரில் போட்டோ ஒன்றை  செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிவிட்டிருந்தார். 

அதில், டிவி தொடர் அவர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டு நான் ராமாயணம் பார்க்கிறேன்? நீங்களும் பார்க்கிறீர்களா? என்று பதிவிட்டிருந்தார்.  இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்து விட்டனர். உணவு இல்லாமல் நான் நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன்.  உங்களுக்கு ராமாயணம் கேட்கிறதோ? ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக உள்ளது என ஆளாளுக்கு பின்னிப்பெடல் எடுத்தனர். 

 பிரதமர் மோடியும் தன் பங்குக்கு போன் செய்து செம டோஸ் விட்டுள்ளார். மக்களுக்கு போதுமான உணவு தானியங்கள் வழங்க வேண்டு மென நான் சொல்லிக் கொண்டிக்கிறேன். ராமாயணம் தொடரை அல்ல என்று காட்டமாகபேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த போட்டோவையும், வாசகத்தையும் நீக்கிவிட்டு வீட்டிலிருந்து அமைச்சர் பணியை செய்து கொண்டிருப்பது போன்ற படத்தை பதிவிட்டிருந்தார். அதில், என் வீடு அலுவலகமாக்கப்பட்டுள்ளது. என் தொடர்பு கொண்டு பணிகளை செய்து வருகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.