Asianet News TamilAsianet News Tamil

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் திட்டம்... மேல்சபை மூலம் செக் வைத்த நாயுடு... ஆத்திரத்தில் மேல்சபையைக் கலைக்கும் ஜெகன்மோகன்!

மேல்சபையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்களும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 9 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மேல்சபையில் ஜெகனம் மோகனுக்கு பெரும்பான்மை இல்லாததால், மூன்று தலைநகர சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆத்திரம் அடைந்தார். 

Jaganmohan plan to dissolve upper house in Ap
Author
Andhra Pradesh, First Published Jan 28, 2020, 6:23 AM IST

ஆந்திராவில் 3 தலை நகரங்கள் அமைக்கும் ஜெகன் மோகனின் முயற்சிக்கு மேல்சபை மூலம் தெலுங்கு தேசம் செக் வைத்ததால், மேல்சபையைக் கலைக்கும் முடிவை ஜெகன் மோகன் எடுத்துள்ளார். Jaganmohan plan to dissolve upper house in Ap
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.  அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ஜெகன மோகனின் அதிரடியால சந்திராபு நாயுடு ஆடிப்போய் இருக்கிறார். சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் ஆந்திராவின் தலைநகராக அமராவதியை நிர்மாணிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்தன. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு ஆந்திர தலைநகர் நிர்மாணத்தை கலைத்த ஜெகன மோகன், மாநிலத்தில் 3 தலைநகரங்களை அமைக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

Jaganmohan plan to dissolve upper house in Ap
அந்தத் தீர்மானம் ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேறியது. ஆந்திராவில் மேல்சபையும் செயல்பாட்டில் உள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற விதிகள் ஆந்திராவில் உள்ளன. அதன்படி மூன்று தலைநகர தீர்மானம் ஆந்திர மேல்சபைக்கு சென்றது. ஆனால், மேல்சபையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்களும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 9 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மேல்சபையில் ஜெகனம் மோகனுக்கு பெரும்பான்மை இல்லாததால், மூன்று தலைநகர சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.Jaganmohan plan to dissolve upper house in Ap
இதனால், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆத்திரம் அடைந்தார். அதைச் சட்டப்பேரவையில் வெளிப்படுத்தும் வகையில், “அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே மேல்சபை செயல்பட்டுவருகிறது. இதுபோன்ற ஒரு மேல்சபை நமக்கு தேவையா என நாம் யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இதனையடுத்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்  ஆந்திராவில் மேல்சபையைக் கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios