Asianet News TamilAsianet News Tamil

தி.மு.க.வினருக்கு வகுப்பெடுத்த ஐடி விங் நிர்வாகி... அரைவேக்காட்டுத்தனத்தை தவிர்க்க நிபந்தனை..!

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மசோதா தாக்க செய்வது குறித்த நடைமுறைகளை திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளர் புதுகை எம்.எம்.அப்துல்லா விவரித்துள்ளார்.

IT wing administrator assigned to the DMK
Author
Tamil Nadu, First Published Dec 11, 2019, 3:32 PM IST

குடியுரிமை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களையில் நிறைவேற்றப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மசோதா தாக்கல் செய்வது குறித்து திமுகவினருக்கு வகுப்பெடுத்துள்ளார் எம்.எம்.அப்துல்லா. IT wing administrator assigned to the DMK

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’முன் குறிப்பு : இந்த போஸ்ட் "நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகள் என்ன?" என்று இன்பாக்சில் தனித் தனியாகக் கேட்ட திமுக தோழர்களுக்காக "மட்டும்" எழுதப்பட்டது. சோ கால்ட் நடுநிலைஸ் மற்றும் வேறு வேலையற்ற எவரும் கமெண்ட் இட வேண்டாம். நான் என் நேரத்தை இனி வீணடிப்பதில்லை என்று முடிவு செய்து இருப்பதால் கமெண்ட் போட்டாலும் பதில் வராது.

ஒரு மசோதா பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ தாக்கல் செய்யப்படுகிறது. அதன் நடைமுறை என்ன? இதில் மொத்தம் மூன்று நிலைகள் உண்டு. முதல் நிலை அறிமுகம். அறிமுக நிலையில் ஒரு மசோதா சம்மந்தப்பட்ட துறை அமைச்சரால் அல்லது சில நேரங்களில் நேரடியாகவே பிரதமரால் அல்லது முதல்வரால் அவைக்கு அறிமுகம் செய்யப்படும். அதை முழுமையாக அவர்கள் அவைக்கு படித்துக் காட்டுவார்கள்.IT wing administrator assigned to the DMK

இரண்டாவது நிலை விவாதம்.. விவாத நிலையில் அந்த மோசோதா குறித்த சாதக பாதகங்கள் , உறுபினர்களின் எண்ணங்கள் விவாரிக்கப்பட்டும்.மூன்றாம் நிலை ஓட்டெடுப்பு.. ஓட்டெடுப்பு நிலையில் அதை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் தங்கள் நிலைப்பாட்டிற்கு ஏற்ப வாக்களிப்பார்கள். இதுதான் ஒரு மசோதாவின் மூன்று நிலைகள். இதில் உங்களுக்கு குழப்பம் இருக்காது என்று நினைக்கிறேன். இருப்பின் திமுகவினர் கமெண்ட்டில் கேட்கவும் 

இதில் வெளிநடப்பு.. எதிர்த்து வாக்களிப்பது ஆகியவை குறித்து பாராளுமன்ற ஜனநாயகம் சொல்வது என்ன? அதன் அர்த்தங்கள் என்ன? வெளிநடப்பில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று அறிமுக நிலையிலேயே அதை எதிர்த்து வெளிநடப்பு செய்வது. இரண்டு விவாதத்தில் தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்வது.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதை விட அதை எதிர்த்து வெளிநடப்பு செய்வது என்பது உச்சபட்ச எதிர்ப்பைக் காட்டுவதாகும். எதிர்த்து வாக்களிப்பது என்பது கைகளால் அறைவது என்றால் வெளிநடப்பு என்பது கட்டையால் அடிப்பது போன்றதாகும். இதில் உங்களுக்கு குழப்பம் இருக்காது என்று நினைக்கிறேன். இருப்பின் திமுகவினர் கமெண்ட்டில் கேட்கவும்.சரி ஒரு கட்சி எதற்கெல்லாம் வெளிநடப்பு செய்வது? எதற்கெல்லாம் எதிர்த்து வாக்களிப்பது என்று எப்போது முடிவு செய்யும்?

ஆளும்கட்சி மெஜாரிட்டியாக இருக்கும் சமயத்தில் ஒரு மசோதாவை ஆளும்கட்சி அறிமுகம் செய்தால் சர்வ நிச்சயமாக அந்த மசோதா நிறைவேறிவிடும். காரணம் ஆளும்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால் நிச்சயம் அவர்களின் வாக்குகளின் எண்ணிக்கையில் அது நிறைவேறிவிடும்.

அந்த மசோதா பெரிய சென்சிட்டிவ் விசயம் இல்லை. அதே நேரத்தில் எதிர்கட்சி "இப்ப இது தேவையா?" என்று நினைத்தால் வெளிநடப்பு செய்யாது விவாதத்தில் தங்கள் கருத்துகளை சொல்லிவிட்டு எரித்து வாக்களிக்கும். அதே நேரத்தில் ஒரு சென்சிட்டிவ்வான விசயம் "இது எப்போதும் தேவையில்லை" என்று நினைத்தால் அதை எதிர்த்து வெளிநடப்பு செய்து தனது உச்சபட்ச எதிர்ப்பைக் காட்டும்.

அதுவும் ஒரு மசோதாவை அறிமுகம் செய்யும் நிலையிலேயே வெளிநடப்பு செய்வது என்பது "மாண்புமிக்க இந்த அவையினுள் கண்ட மண்ணாங்கட்டியை எல்லாம் விவாதிக்க உள்ளே கொண்டு வரும் போது அந்த இடத்தில் நான் இருக்க மாட்டேன்" என்று அர்த்தம் ஆகும். விவாத நிலையில் வெளிநடப்பை விட அறிமுக நிலையில் வெளிநடப்பு என்பது இன்னும் அதிகபட்ச எதிர்ப்பை உணர்த்துவதாகும். அதாவது நீ சொல்ல வர்ற விசயத்தை நான் ஹைகோர்ட்டுக்கு கூட மதிக்கலை என்று அர்த்தம்.

பெரும்பாலான நேரம் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்து தங்கள் நிலைப்பாட்டை சொல்லிவிட்டு வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்து விடும். காரணம் தங்கள் வாக்குகளால் எந்த மாற்றமும் வரப் போவதில்லை என்பதோடு பாராளுமன்ற ஜனநாயகப்படி எதிர்ப்பு வாக்குகளை விட அதிகமான எதிர்ப்பை காட்டிவிட்டோம் என்பதால் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை.IT wing administrator assigned to the DMK

ஆனால் சமீபகாலமாக இதில் மக்களுக்கு குழப்பம் வருவதால்.. இதை மக்களிடையே வேறு மாதிரி திரிக்கப்பார்ப்பதால் எதிர் கட்சிகள் வெளிநடப்பும் செய்கின்றன. எதிர்த்து வாக்களிக்கவும் செய்கின்றன. இது பழைய கற்காலமோ அல்லது மன்னர் காலமோ அல்ல. அதிகாரத்தைக் கைப்பற்றவும், தன்னுடைய எதிர்ப்பைக் காட்டவும் நீங்கள் விரும்பும்படி வாளால் வெட்டவோ கத்தியால் குத்தவோ முடியாது. இது ஜனநாயகக் காலம். எனவே பாராளுமன்ற ஜனநாயக முறை எதிர்ப்புகளைக் காமிக்க அதிகபட்ச ஜனநாயக வழி எது என்று சொல்கிறதோ... அனுமதிக்கிறதோ அதை மட்டுமே செய்ய முடியும்.

எனவே நிச்சயம் ஒரு மசோதா ஆளும்கட்சியின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் ஒரு எதிர்கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை அறிய இரண்டு விசயங்களை மட்டுமே பார்க்க வேண்டும். ஒன்று வெளிநடப்பு செய்து இருக்கிறார்களா? செய்து இருந்தால் அதிகபட்ச எதிர்ப்பைக் காட்டி இருக்கின்றார்கள்.

இரண்டு எதிர்த்து வாக்களித்து இருக்கின்றார்களா? இருந்தால் எதிர்ப்பை காட்டி இருக்கிறார்கள். இரண்டையும் செய்து இருந்தால் அதிகபட்ச எதிர்ப்பையும் காட்டி இருக்கின்றார்கள், எதிர்பையும் காட்டி இருக்கின்றார்கள் என்று பொருள். இதில் உங்களுக்கு குழப்பம் இருக்காது என்று நினைக்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios