Asianet News TamilAsianet News Tamil

இது நியாயமா..? எங்க தலையிலா கட்டுவீங்க..? கொதிக்கும் பாமக ராமதாஸ்..!

தனியார் செல்பேசி கட்டணங்கள் ஒரே நேரத்தில் 45 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். 

Is this fair? Where are you headless ..? Ramadoss tenson ..!
Author
Tamil Nadu, First Published Dec 2, 2019, 11:35 AM IST

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’திருச்சி விமான நிலையம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்க வேண்டும் என்ற இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தின் பரிந்துரை கண்டிக்கத்தக்கது. விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்; பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும்.

Is this fair? Where are you headless ..? Ramadoss tenson ..!

மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் புட்டிகளில் குளிர்பானங்களை விற்க தடை விதிக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள 16 வயது மாணவன் ஆதித்ய துபேவுக்கு பாராட்டுகள். பூமியைக் காக்க கிரேட்டா துன்பர்க், ஆதித்ய துபே வழியில் இளைய தலைமுறை களமிறங்க வேண்டும்.Is this fair? Where are you headless ..? Ramadoss tenson ..!

தனியார் செல்பேசி கட்டணங்கள் ஒரே நேரத்தில் 45 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் கொள்ளை லாபம் ஈட்டிய இந்த நிறுவனங்கள் இப்போது சரிவிலிருந்து மீள இப்போது நுகர்வோர் தலையில் பெரும் சுமையை சுமத்துவது நியாயமல்ல. இதை டிராய் அனுமதிக்கக்கூடாது’’எனத் தெரிவித்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios