Asianet News TamilAsianet News Tamil

கெஜ்ரிவால் பயங்கரவாதியா..? அவரைப்போல் சாதிக்கமுடியுமா? சர்டிபிகேட் தரும் கமல்ஹாசன்.

கெஜ்ரிவால் தன்னுடைய சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று சொல்லியிருப்பது ஆம் ஆத்மி தொண்டர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது.

Is Kesriwal a terrorist ..? Is it possible to accomplish like him? Kamal Haasan is the Certificate
Author
Delhi, First Published Jan 29, 2020, 7:08 PM IST

கெஜ்ரிவால் பயங்கரவாதியா..? அவரைப்போல் சாதிக்கமுடியுமா? சர்டிபிகேட் தரும் கமல்ஹாசன்.

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் அரசின் சாதனையை இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாராட்டு சான்றிதழ் வழங்கி இருக்கிறார். டெல்லிக்கு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கெஜ்ரிவால் தன்னுடைய சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று சொல்லியிருப்பது ஆம் ஆத்மி தொண்டர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது

.Is Kesriwal a terrorist ..? Is it possible to accomplish like him? Kamal Haasan is the Certificate

டெல்லியில் எழுபது தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் பிப்.,08 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி, பாஜ., காங்., உள்ளிட்ட கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜ., வேட்பாளர்களை ஆதரித்து நஜப்கர் பகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவதுIs Kesriwal a terrorist ..? Is it possible to accomplish like him? Kamal Haasan is the Certificate

  "யமுனை நதியை தூய்மையாக்குவோம் என ஆம்ஆத்மி கூறிவருகிறது. கெஜ்ரிவால் அவர்களே, உங்கள் சட்டையை கழற்றி, யமுனை நதியில் மூழ்கடித்து பார்க்க வேண்டும் அப்போது தெரியும் அந்த  நதியின்  நிலை. அதேபோல், டில்லி காற்றை தூய்மையாக்குவதாகவும் சொல்கிறார்கள். அவர்கள் டெல்லி மக்களுக்காக எதையும் செய்யவில்லை,அவர்கள் சொல்லுவது எல்லாம் விளம்பரத்திற்காக நாடகம் நடிக்கின்றனர். காற்று மாசுவிற்கு காரணம் கெஜ்ரிவால் அரசின் செயலற்ற தன்மை தான். டில்லி நகரமே மாசுஅடைந்து போய் இருக்கிறது.அங்குள்ள மக்கள் யாரும் காற்றை சுவாசிக்க முடியவில்லை.அதில் விஷம் தான் கலந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.


T Balamurukan

Follow Us:
Download App:
  • android
  • ios