Asianet News TamilAsianet News Tamil

சோதனையே செய்யாமல் கொரோனா இருக்கிறதா பொய் சொல்றாங்க... முகாமில் அழுது குமுறி அதிர வைக்கும் வீடியோ..!

பரிசோதனை செய்யாமலேயே எங்களுக்கு கொரோனோ தொற்று இருப்பதாக கூறி பொய் செய்தி பரப்பு சதி செய்கிறார்கள் என தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் ஒருவர் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 

Is Corona Doing No Testing Video
Author
Tamil Nadu, First Published Apr 1, 2020, 1:50 PM IST

பரிசோதனை செய்யாமலேயே எங்களுக்கு கொரோனோ தொற்று இருப்பதாக கூறி பொய் செய்தி பரப்பு சதி செய்கிறார்கள் என தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் ஒருவர் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். 

டெல்லி, நிஜாமுதீன் பகுதியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்போராட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கரணையைச் சேர்ந்த, 18 பேர் அடையாளம் காணப்பட்டு, நேற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளாதாக செய்தி வெளியானது.Is Corona Doing No Testing Video

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதனை மறுத்து மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளீயிட்டுள்ளனர். அதில், ‘’அன்பிற்குரிய நண்பர்களே... நேற்று காலை 10 மணிக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம். பரிசோதிக்க வேண்டும் என்று கூறி மேடவாக்கம் அரசு மருத்துவமனைக்கு எங்களை அழைத்தார்கள். நாங்கள் பள்ளிக்கரணையில் இருந்து மேடவாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தோம்.

அங்கே எங்களது பெயர், மொபைல் எண்களை வாங்கிக்கொண்டார்கள். அங்கிருந்து மதிய உணவு கூட தரவில்லை. நான்கைந்து மணியைப் போல ரசம் சாதம் கொடுத்தார்கள். இதுவரை எங்களை யாரும் சோதனை செய்யவில்லை. ஆனால், செய்தி ஊடகங்களில் எங்கள் 17 பேருக்கும் கொரோனா தொற்று  இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.Is Corona Doing No Testing Video

அந்தச் செய்தியில் பள்ளிக்கரணையில் இருந்து மேடவாக்கம் மருத்துவமனைக்கு வந்து சோதனை செய்த 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இதுவரை எங்களுக்கு ரத்தப்பரிசோதனை கூட செய்யவில்லை. இதுதான் நாங்கள் தங்கியிருக்கும் சமூக விலகல் கூடம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எங்களிடம் வாங்கப்பட்ட பெயர், முகவரி, செல் நம்பர் அனைத்தையும் வாட்ஸ்அப் குரூப்பில் போலீசார் பரப்பி வருகின்றனர்.

 உண்மையிலேயே நோய்த்தொறு இருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். எங்கள் குடும்பத்தை நாங்கள் வசிக்கும் தெருவில் உள்ளவர்கள் எப்படி பார்ப்பார்கள்? என்று யோசித்துப் பாருங்கள். பரிசோதனை செய்து அது உறுதியாக்க பட்டிருந்தால் கூட பரவாயில்லை. சோதனையே செய்யாமல் ஒருவனுக்கு தோற்று உறுதியாக இருப்பது போல் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். தயவுசெய்து இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என அந்த வீடியோவில் கதறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios