திமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் பிற்பகல் 3 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மீண்டும் சீறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது உடல்நலக் குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 

இந்நிலையில், மீண்டும் இன்று நெஞ்சுவலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பிற்பகல் 3 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளார்.