Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசுக்கு அடிக்குமேல் அடி: தொழில்துறை உற்பத்தியும் 3.8 சதவீதமாக வீழ்ந்தது.....

நாட்டின் தொழில்துறை உற்பத்தி (ஐஐபி) அக்டோபரில் 3.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

industrial deveopment is worst in India
Author
Delhi, First Published Dec 14, 2019, 6:37 AM IST

ஏற்கனவே நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) கடந்த இரு காலாண்டுகளாக சரிந்து கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாகக் குறைந்தது. 

இப்போது அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் சரிந்துள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

industrial deveopment is worst in India
உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரத் துறைகளின் உற்பத்தி குறைந்ததையடுத்து சென்ற அக்டோபா் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 3.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. 

இதையடுத்து, நாட்டின் தொழில்துறை உற்பத்தி தொடா்ந்து 3-ஆவது மாதமாக சரிவை நோக்கிச் சென்றுள்ளது. தொழில்துறை உற்பத்தியானது கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் 4.3 சதவீதமாகவும், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.4 சதவீதமாகவும் காணப்பட்டது.

industrial deveopment is worst in India

கடந்தாண்டு அக்டோபா் மாதத்தில்தான் தொழில் துறை உற்பத்தியானது அதிகபட்சமாக 8.4 சதவீதத்தை எட்டியிருந்தது.
நடப்பாண்டு ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4.9 சதவீதம் அளவுக்கு வளா்ச்சியை சந்தித்திருந்தது. 

அதன் பிறகு, சரிவு நிலையே நீடித்து வருகிறது.கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான ஏழு மாத கால அளவில் 0.5 சதவீதம் என்றளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

industrial deveopment is worst in India

அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ஐஐபி வளா்ச்சியானது 5.7 சதவீதமாக இருந்தது.கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் உற்பத்தி துறை வளா்ச்சி விகிதமானது 8.2 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மின் உற்பத்தி துறை உற்பத்தி கடந்தாண்டு அக்டோபரில் 10.8 சதவீத வளா்ச்சியைப் பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டு அக்டோபரில் 12.2 சதவீதம் சரிவடைந்துள்ளது. மேலும், சுரங்கத் துறை உற்பத்தியும் 8 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் கடந்தாண்டு அக்டோபரில் இத்துறை உற்பத்தி 7.3 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது

Follow Us:
Download App:
  • android
  • ios