உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது ,  இதை கேட்போர் அனைவரையும் அப்படியா என வியப்படைய வைத்துள்ளது .  சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவியுள்ளது இதுவரையில் இந்த வைரசுக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் . 

 சீனாவில் மட்டும் சுமார் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரையில் கொரோனா வைரசுக்கு  மருந்து கண்டுபிடிக்கப்படாததால் அந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  சீனாவையும் தாண்டி ஜப்பான் ,  ஹாங்காங் ,  சிங்கப்பூர் , தாய்லாந்து அமெரிக்கா ,  ஆஸ்திரேலியா  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது . இதனால் கொரோனா  சர்வதேச அச்சுறுத்தலாக மாறியுள்ளது .  உலக நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும்  மருத்துவ குழுவினர் வைரஸ் பாதிப்பிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர் . 

இந்நிலையில் கொரோனா  வைரஸ் பாதிப்பிற்கு இந்தியா மருந்து  கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாக உள்ளது , இது தொடர்பாக வெளியாகி வரும் பதிவுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் மருந்தை இந்தியா கண்டுபிடித்து விட்டது , இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறியுள்ள நோயாளிகள் விரைந்து குணமடைந்து வருகின்றனர்,  எனும் தலைப்பில் செய்திகள் உலாவருகிறது.   இந்நிலையில் பலர் இதுபோன்ற தகவல்களை பரப்பி வரும் நிலையில் இந்தியா மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை என்பது  உறுதியாகி உள்ளது,  இந்நிலையில் கொரோனா வைரசை முடக்கும் மருந்துகளுடன் இந்திய விமானம் சீனாவுக்கு விரைந்துள்ளது குறிப்பிடதக்கது.