Asianet News TamilAsianet News Tamil

கோயில்களில் சாத்தான் இருப்பதாக சும்மாதான் சொன்னேன்.. மன்னிச்சிடுங்க... கதறும் மோகன் சி லாசரஸ்!

கிறித்துவ மத போதகர் மோகன் சி லாரசஸ் கோயில்களில் சாத்தான் இருப்பதாக பேசி அதனை தற்போது மற்றுது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 
 

In the temples, there is the devil says Mohan C Lazarus
Author
Tamil Nadu, First Published Mar 3, 2020, 5:51 PM IST

கிறித்துவ மத போதகர் மோகன் சி லாரசஸ் கோயில்களில் சாத்தான் இருப்பதாக பேசி அதனை தற்போது மற்றுது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 

வழக்கு பதிவு செய்யும் முன், ‘’அதாவது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டைப் போல சாத்தானுடைய அரங்குகள் கிடையாது. அதை அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இங்கு இருக்கிறது போல பெரியபெரிய கோயில்கள் சாத்தானுடைய அரங்குகள் கிடையாது. கும்பகோணம் போனால் நாம் நம்ப முடியாத அளவுக்கு அங்கே சாத்தான் அத்தனை கோயில்களிலும், இடங்களிலும் நிறைந்திருக்கிறான் எனப்பேசிய மத போதகர் மோகன் சி லாரசஸ் அப்படியே இப்போது மாற்றி பேசி இருக்கிறார்.  In the temples, there is the devil says Mohan C Lazarus

இப்போது அவர், ‘’பொது இடத்தில் பேசப்பட்ட ஒரு காரியமல்ல. இது எந்த பொது மக்களுக்கும் சொல்லப்பட்ட வார்த்தையும் அல்ல. நான் இந்த பொதுக் கூட்டத்திலும் அப்படி பேசியதும் இல்லை. எந்த பேட்டியிலும் அப்படி சொன்னதும் இல்லை. இது நடந்து சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் கிறிஸ்தவ ஊழியர்கள் ஒரு சிறு கூட்டமாய் கூடி இருந்த போது இந்தியாவின் மீது நம்பிக்கை இந்தியாவில் மத நம்பிக்கை கொடுத்து விடும் சூழ்நிலை காரியம். அதை குறித்து அந்த கேள்விகளுக்கு விளக்கம் சொன்ன போது அவர்களுக்கு விளக்கி சொன்ன ஒரு காரியம்.In the temples, there is the devil says Mohan C Lazarus

எல்லா மதத்தில் உள்ளவர்களையும் ஒரேமாதிரி நேசிக்கிறேன். நான் வேறு எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேசியதில்லை. நான் யாரையும் மதம் மாற்ற முயற்சிப்பது இல்லை. உண்மையிலேயே நான் பேசியதைக் கேட்டு நீங்கள் வருத்தமடைந்து இருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன். உங்களை வைத்துள்ள நம்பிக்கையை குறை சொல்லி பேசுவது, இழிவுபடுத்துவது எனது நோக்கமல்ல. அதை நான் செய்வதில்லை’’என மாறிப்பேசியுள்ளார்.

In the temples, there is the devil says Mohan C Lazarus
 
இதனிடையே, இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது தமிழகம் முழுவதும் 17 இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாஜக, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வருகின்றன. மற்றொரு பக்கம் மோகன் சி லாசரஸ் கைது செய்ய தனிப்படை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios