கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் மாதத்திற்கான ஒரு மாத வாடகையை வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசு, வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தலைமை செயலாளர் சண்முகம் அதனை மாற்றி அறிவித்துள்ளார். 

கொரோனாவால் ஊரடங்கு, தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மூடல் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம், மார்ச் மாதத்திற்கான ஒரு மாத வாடகையை வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசு, வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வாடகை கேட்டு யாரும் தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனாவால் தமிழகத்தில் 74 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வருமானம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்களிடம் மார்ச் மாதத்திற்கான வாடகையை வசூல் செய்ய வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதனை மீறி, வீட்டு வாடகை கேட்டு வீட்டை காலி செய்ய வற்புறுத்தும் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் இல்லாமல், முழுத்தொகையை வழங்க வேண்டும் என தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆளுநரை சந்தித்து திரும்புகையில் இந்த சலுகை குறித்து தலைமை செயலாளர் சண்முகம் மாற்றி அறிவித்துள்ளார்.

அதன்படி, ‘’மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் ஒரு மாத வாடகையை வீட்டு உரிமையாளர்கள் வாங்கக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது; முதல்வர் ஒருபடி மேலே போய் இரண்டு மாத வாடகையை காலம் தாழ்த்தி வாங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறார்’’ எனத் தெரிவித்துள்ளார். அறிவித்த சலுகையை ஒரு மணி நேரத்தில் தலைமை செயலாளரை விட்டு மாற்று அறிக்கை கொடுக்க வைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.