Asianet News TamilAsianet News Tamil

ராமதாஸை கதறவிடும் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம்... அன்றே சொன்னதை கேட்காத எடப்பாடி..!

கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்று இரவு, சப் இன்ஸ்பெக்டர் வில்சன் பணியிலிருந்தார். அவ்வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தார். அப்போது கேரள எல்லையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி ஸ்கார்பியோ வாகனம் ஒன்று வந்துள்ளது. அதை நிறுத்தி வில்சன் சோதனையிடும் போது திடீரென அதில் வந்தவர்கள் வில்சன் மீது துப்பாக்கிச் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மார்பு, வயிறு, தொடையில் குண்டுப்பாய்ந்த வில்சன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். 

illegal gun culture... edappadi palanisamy Don't listen to ramadoss
Author
Tamil Nadu, First Published Jan 9, 2020, 12:55 PM IST

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டதாக பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறேன். அதற்கான ஆதாரம் தான் களியக்காவிளை துப்பாக்கிச்சூடு என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார். 

கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்று இரவு, சப் இன்ஸ்பெக்டர் வில்சன் பணியிலிருந்தார். அவ்வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தார். அப்போது கேரள எல்லையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி ஸ்கார்பியோ வாகனம் ஒன்று வந்துள்ளது. அதை நிறுத்தி வில்சன் சோதனையிடும் போது திடீரென அதில் வந்தவர்கள் வில்சன் மீது துப்பாக்கிச் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மார்பு, வயிறு, தொடையில் குண்டுப்பாய்ந்த வில்சன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். 

illegal gun culture... edappadi palanisamy Don't listen to ramadoss

துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்ற காவல்கள் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர்கள் இருவரும் காரில் ஏறி தப்பிச்சென்றனர். இதையடுத்து, சோதனை சாவடியில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த வில்சனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

illegal gun culture... edappadi palanisamy Don't listen to ramadoss

இந்நிலையில், இதுதொடர்பாக டுவிட்டரில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்;- "கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொடுமையை செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

illegal gun culture... edappadi palanisamy Don't listen to ramadoss

மேலும், தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டதாக பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறேன். அதற்கான ஆதாரம் தான் களியக்காவிளை துப்பாக்கிச்சூடு ஆகும். இனியும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios