நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தனது எதிர்கால அரசியல் திட்டம் குறித்து ஆழமான, அர்த்தமுள்ள உரையை நிகழ்த்தினார். குறிப்பாக கட்சி தொடங்கினால் தான் பின்பற்றப்போகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில் முதலமைச்சர் பதவியை தான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியது அவரது மாவட்ட செயலாளர்களையும், ரசிகர்களையும் ஏமாற்றமடைய செய்துள்ளது. 

இதையும் படிங்க: ரூட்டை மாற்றி ஸ்ரைட்டாக அடித்த ரஜினிகாந்த்... வெற்றிடம் குறித்து ஓபன் டாக்...!

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், அரசியலுக்கு வாங்க, வாங்க என மக்கள் அழைத்துக் கொண்டிருந்தனர். அதற்கான சரியான சந்தர்ப்பம் இப்போது தான் அமைந்துள்ளது. இரண்டு அசுர பலம் கொண்ட கட்சிகளின் ஜாம்பவான்கள் இப்போது இல்லை. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போ நான் அரசியலுக்கு வர்றேன் என்றால், மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் எழுச்சி ஏற்பட வேண்டும். 

இதையும் படிங்க: “வீடு, வீடாக போய் கூப்பிடுவேன்”... சிஸ்டத்தை சரி செய்ய ரஜினி போட்ட ஸ்கெட்ச்...!

அப்படி எழுச்சி ஏற்பட்டால் அந்த இரண்டு அரசியல் கட்சிகளின் பணம், ஆள் பலம், சூழ்ச்சி எதுவும் நிற்காமல் தூள், தூள் ஆகிவிடும். அதை தான் நான் விரும்புகிறேன். அந்த எழுச்சி ஏற்பட வேண்டும். அது ஏற்படும் என்று நான் நினைக்கிறேன். தமிழ் மண் எப்போதும் புரட்சிக்கு பெயர் போன மண். காந்தி, விவேகானந்தர் என அனைவரும் இங்கு வந்து தான் தங்களது மாற்றத்தை உணர்ந்தனர் என்று கூறினர். 60களில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி செய்த போது, இங்கு தான் ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது. 1967ல் நடந்த அந்த புரட்சியை 2021ல் மக்கள் நடத்தி காட்ட வேண்டும் என்றும் தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் அன்பு கட்டளை பிறப்பித்துள்ளார்.