Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் என்றால் , கொலைகள் நடப்பது சகஜம்தான்...!! மூர்க்கத்தனம் காட்டிய ஜான்பாண்டியன்..!!

உள்ளாட்சித் தேர்தல் என்றால் கொலைகளும் சண்டைகளும் நடக்கத்தான் செய்யும் ,  இதெல்லாம் சகஜம் என்ற ரீதியில் அவர் பதில் அளித்துள்ளார்.  

if local body election murder and clash is normal - particular community part leader jhon pandiyan speech
Author
Madurai, First Published Dec 13, 2019, 5:43 PM IST

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கொலைகள் சகஜம்தான் என  தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சாதிக்கட்சி தலைவராக இருந்து வருகிறார் ஜான் பாண்டியன் . இவர் அரசியலில் இருந்து வந்தாலும்  இவர்  மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.  சில நேரங்களில் சர்ச்சையான கருத்துக்களை  கூறி பரபரப்பை ஏற்படுத்துவது  ஜான்பாண்டியனின் வழக்கமாக இருந்து வருகிறது .   இந்நிலையில் சாத்தூர் அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டி தொடர்பான பிரச்சினையில் நியாயம் கேட்க சென்ற வங்கி ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

if local body election murder and clash is normal - particular community part leader jhon pandiyan speech

இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .  ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜான்பாண்டியன் இதெல்லாம் சகஜம்தான் என கூறியிருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம்  பேசி அவர் ,  ஏற்கனவே அதிமுகவின் கூட்டணியில்  இருந்து வருகிறோம்,  அந்த வகையில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி இடங்கள் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேசி வருகிறோம் .  குடியுரிமை சட்டத் திருத்தம்  என்பது நமக்கான உரிமையை மீட்பதாகும்,   அதற்கு அதிமுக ஆதரவு அளித்து இருப்பது வரவேற்கத்தக்கது .  பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் திமுகவும் இச்சட்டத்தை ஆதரித்து இருப்பார்கள்.  இந்நேரத்தில் ஈழத்தமிழர்களைப் பற்றி பலர் பேசுகிறார்கள் . தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களால்.

if local body election murder and clash is normal - particular community part leader jhon pandiyan speech

தான் அங்கே ஈழத்தில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்றார் .  சாத்தூரில் ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டி தொடர்பான பிரச்சனையில் நியாயம் கேட்க சென்ற வங்கி ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஜான்பாண்டியன் இடத்தில் கேட்டதற்கு ,  உள்ளாட்சித் தேர்தல் என்றால் கொலைகளும் சண்டைகளும் நடக்கத்தான் செய்யும் ,  இதெல்லாம் சகஜம் என்ற ரீதியில் அவர் பதில் அளித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர்,   மாநில அரசும் காவல் துறையும்தான்  பாதுகாப்பை பலப்படுத்தி சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றார் . உள்ளாட்சித் தேர்தல் என்றால் கொலைகள் சகஜம்தான் என ஜான்பாண்டியன்  தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

Follow Us:
Download App:
  • android
  • ios