அமைச்சர் மணி கண்டணின் பதவி தன்னால்தான் பறிக்கப்பட்டது என்றும், ஜெயலலிதா இருந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன் என்றும் திருவாடனை தொகுதி எம்எல்ஏ அதிரடி கிளப்பியுள்ளார்.

 

சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி அரசியலுக்கு வந்து எம்எல்ஏ  ஆனவர் கருணாஸ்.  சினிமா பெரிய அளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் கடந்த 2013 ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்ற இயக்கத்தை ஆரம்பித்து அரசியலில் அடியெடுத்து வைத்தார் கருனாஸ்,  கட்சி ஆரம்பித்த ஓராண்டில்  சசிகலாவின்  கருணையால் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை  தொகுதியில் போட்டியிட வாய்ப்பை பெற்று,  அதிமுகவின் ஆதரவில்  திருவாடானை தொகுதியில் வெற்றியும் பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர்  முதலமைச்சராக பதவியேற்ற  எடப்பாடி  பழனிசாமியுடன் உறவு சுமுகமாக இல்லாததால், அதிமுக ஆட்சியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சித்து வந்தார் கருணாஸ்,  

இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார், அதிமுகவை ஆதரிப்பதும்  எதிர்ப்பதுமாக  இருந்து வருகிறார், சில தினங்களுக்கு முன்பு  மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்த கருணாஸ்,  அதிமுகவில் அமைச்சர் மணிகண்டன் திருவாடனை தொகுதியில் தம்மை அனுமதிக்காமல் அரசியல் செய்து வருகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் தெரிவித்தார், இதற்கிடையில் அமைச்சர் மணிகண்டன் தமிழக அரசை விமர்சித்து பேட்டி கொடுத்ததின் அடிப்படையில் , அமைச்சர் மணிகண்டன்  அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

 

அது தற்போது அதிமுகவில் மட்டுமல்லாமல் அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.  இதுதொடர்பாக பேட்டி கொடுத்துள்ள கருணாஸ், தான் கொடுத்த புகாரின் காரணமாகத்தான் அமைச்சர் மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டது என அதிரடியாக தெரிவித்துள்ளார்.  ஜெயலலிதாவிடம் தனக்கு நல்ல செல்வாக்கு இருந்ததாக கூறும் கருணாஸ் அவர் இருந்திருந்தால் நான் அமைச்சராக்கி இருப்பேன் என்று திகில் கிளப்பியுள்ளார்.