Asianet News TamilAsianet News Tamil

சமஸ்கிருதம் பேசினால் சர்க்ரை நோய் வராது..!! பாராளுமன்றத்தில் சிரிக்காமல் காமெடி செய்த பாஜக எம்.பி..!!

அன்றாடம் சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கு சர்க்கரை நோய் கொழுப்பு படிவது தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது  என்று அமெரிக்க கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

if daily speaking Sanskrit will not affect sugar and cholesterol- bjp mp speech in parliament
Author
Delhi, First Published Dec 13, 2019, 12:45 PM IST

தினமும் சமஸ்கிருதத்தில் பேசினாள் சர்க்கரை நோய் ,  கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் வராது என நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .  சமீபகாலமாக பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசி வரும் கருத்துக்கள் சர்ச்சையை  கிளப்பிவருகின்றன.  நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு எதிர்க் கட்சி எம்பிக்கள் போராடிவரும் நிலையில்,  தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை பாஜக எம்பிக்கள் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்களோ இல்லையோ  ஆனால் குண்டக்க மண்டக்க பேசி குழப்பத்தை ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . 

if daily speaking Sanskrit will not affect sugar and cholesterol- bjp mp speech in parliament

பசு மாட்டின்  கோமியம் மருத்துவ குணம் உடையது ,   பசுவின் பாலில் தங்கம் உள்ளது ,  என ஏற்கனவே பாஜக எம்பிக்கள் பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தனர் இந்நிலையில் சமஸ்கிருத பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .  இது தொடர்பான விவாதத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.  வழக்கமாக ஆங்கிலத்தில் பட்டையை கிளப்பும் அ. ராசா கூட இந்த விவாதத்தில் பங்கேற்று தமிழில் பேசினார் .  இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக எம்பி  கணேஷ் சிங் பேசியபோது ,  அவரின் கருத்து அனைவரையும்  அதிர்ச்சி அடைய வைத்தது .  அதன் விவரம் :- உலகின் 97%   மொழிகள் உடபட  சில இஸ்லாமிய மொழிகளுக்கும் கூட அடிப்படை சமஸ்கிருதம்தான் ,  அன்றாடம் சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கு சர்க்கரை நோய் கொழுப்பு படிவது தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது  என்று அமெரிக்க கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

if daily speaking Sanskrit will not affect sugar and cholesterol- bjp mp speech in parliament

சமஸ்கிருதம் பேசும் போது அது நம்முடைய நரம்பு மண்டலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய நோயின்றி வாழ துணை செய்கிறது  என கண்டறியப்பட்டுள்ளது கம்ப்யூட்டர் ப்ரோகிராம் மொழியாக சமஸ்கிருதத்தின் கொண்டுவந்தால் அது சிறந்ததாக இருக்கும் என நாசா கூறியுள்ளது  என்று அடுக்கடுக்கான குண்டுகளை வீசினர் .  சமஸ்கிருதம் நெளிவு சுளிவு நிறைந்த மொழி ,  பிரதர் , பசு , போன்ற பல ஆங்கில வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை . அப்படிப்பட்ட தொன்மையான மொழி  மற்ற மொழிகளை பாதிக்காது என்றார் .   பாஜக எம்பியின் இந்த பேச்சு சமூகவலைத்தளத்தில்  கேலி கிண்டல் ஆக மாறியுள்ளது .

Follow Us:
Download App:
  • android
  • ios