அடுத்த புரட்சித்தலைவின்னு கூப்பிடாதீங்க... என்னை உங்கள் சகோதரியா நினைங்க உருகும் கிருஷ்ணப்ரியா...

I request you to not to label me with any psedonyms
First Published Dec 28, 2017, 5:12 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



அடுத்த புரட்சித்தலைவி என எந்த "பட்டத்தையும்" எனக்கு அளிக்க வேண்டாம் என இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை புரட்சித்தலைவி, அம்மா என அழைத்தனர் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும். அவரது ஜெ.வின் மறைவிற்கு  பின் அடுத்த ஜெயலலிதா யார் என்ற கேள்வியும் அங்காங்கே கட்சியினரிடம் எழுந்து வருகிறது.

அரசியலில் ஜெயலலிதா வகித்த இடத்தை பிடிக்க கடும் முயற்சிகளை எடுத்து வந்தனர். ஜெயலலிதா மறைந்த சில நாட்களிலேயே, சசிகலா நடை, உடை, தோரணை என மாற்றிவந்தார்.

ஆனால், ஜெயலலிதாவின் அந்த மாஸ் லுக் சசிகலாவிற்கு எடுபடாமல் போனது. இந்நிலையில், சசிகலா குடும்பத்தை சேர்ந்த பலரும் ஜெயலலிதா மறைவிற்கு பின், சசிகலா சிறைக்கு சென்ற அடுத்த நாளிலிருந்து ஊடக வெளிச்சத்துக்கு வந்து அரசியல் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா கிருஷ்ணப்ரியா ஃ பவுண்டேஷன் நடத்தி வருகிறார். அப்பபோ சமூக வலைதளங்களில் பல கருத்துக்களை கூறி வருகிறார். அதேநேரத்தில் அரசியல் கட்சிகளின் தவறையும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார். அரசியல் தலைவர்களைப்போல செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்துகிறார். இதனால் கிருஷ்ணபிரியாவின் ஆதரவாளர்கள் அவரை அடுத்த புரட்சித்தலைவி எனவும் கூறி வருகின்றனர்.

ஆதரவாளர்கள்  கொடுத்த பட்டம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ள கிருஷ்ணபிரியா, அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் : தாங்கள் எந்த "பட்டத்தையும்" எனக்கு அளிக்க வேண்டாம், நான் அவற்றை விரும்பமாட்டேன். "சகோதரி" என்று அழைத்து என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைப்பதையே நான் விரும்புகிறேன்.   ❤️ I request you to not to label me with any psedonyms. I prefer to be one amongst your family members. Just call me “ sagodhari( sister ) “ என இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.