மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை மறந்து துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தின் பிறந்த நாளுக்கு போஸ்டர் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

வேலுார் தி.மு.க - எம்.பி., கதிர் ஆனந்த் பிறந்த நாள், கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அவருக்கு வாழ்த்து தெரிவித்து, நகர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருந்தனர். போஸ்டர்களில், ஒன்றில்கூட மு.க.ஸ்டாலின் படம் இல்லவே இல்லை. இதைப் பார்த்து தி.மு.க.,காரர்கள் அதிர்ச்சியாகி விட்டார்களாம். இது தொடர்பாக கதிர் ஆனந்தின் தகப்பனாரும் திமுக பொருளாளரும், ஸ்டாலின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவருமான துரைமுருகனிடம் நேரில் சென்று இது குறித்து கேட்டுள்ளனர். 

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட துரைமுருகன், ’’மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டு தான், கட்சியில் இருக்கிறேன். உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்க’என கோபப்பட்டு அனுப்பி இருக்கிறார். இதனால், வேலூர் உடன்பிறப்புகள் விரக்தியடைந்து உள்ளனர்.   

இதனால் நொந்துபோன திமுக நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படியொரு கருத்தை பகிர்ந்துள்ளார்.