தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களை வந்தேறி என சொல்பவர்கள், பங்களாதேஷில் இருந்து வந்தவனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ள ராதாரவி, இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாகவும் சவால் விடுத்துள்ளார்.

 

சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் பாஜக சார்பில் நடந்த பேரணியின் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களை வந்தேறி என்று கோஷமிடுபவர்கள், பங்களாதேஷில் இருந்து வருபவனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன் ? என கேள்வி எழுப்பி உள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால், தான் இஸ்லாம் மதத்தை தழுவத் தயாராக இருப்பதாக தெரிவித்த ராதாரவி, இலங்கை வாழ் தமிழர்களுக்காக போராடுவதைப் போல சிலர் பணத்திற்காக நடிப்பதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்து வரும் நெட்டிசன்கள் ’’முஸ்லிமா மறுவது இருக்கட்டும்? முதல்ல கட்சி மாறாம இந்த (#பாஜக) கட்சிலயாவது கடைசிவரை இருக்க சொல்லு அவனை என கூட்டத்தை தாண்டி சென்ற 2 பேர் பேசிக்கொண்டு சென்றனர்’’என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.