Asianet News TamilAsianet News Tamil

எத்தனை நாளாச்சு..? எதுவுமே நடக்கலையே... பாஜக அரசை கேள்வி கேட்டு துளைத்தெடுக்கும் பாமக ராமதாஸ்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டப்பூர்வமாகி விட்டது  என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

How many days ..? Nothing is happening ... Question the Ramadoss
Author
Tamil Nadu, First Published Feb 26, 2020, 11:19 AM IST

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டப்பூர்வமாகி விட்டது  என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழகத்தின் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் கடந்த 15 ஆண்டுகளில் 300% அதிகரித்து இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது மிகவும்  அதிர்ச்சியளிக்கிறது. நகரங்களைப்  போல கிராமங்களிலும் வாழ்க்கை முறை மாறியிருப்பது தான் இதற்கு முக்கியக் காரணம் என்பது கசப்பான உண்மை!How many days ..? Nothing is happening ... Question the Ramadoss

நீரிழிவு நோய் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமை. நீரிழிவு நோயின் பாதிப்புகள், அதை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள், யோகா ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்!

How many days ..? Nothing is happening ... Question the Ramadoss

தமிழ்நாட்டில் நாகை, கடலூர் மாவட்டங்களில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்து விட்டது. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டப்பூர்வமாகி விட்டது  என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது!

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் ஆகி விட்டன. அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால், சுற்றுச்சுவர் அமைப்பதைத் தவிர வேறு எந்த பணியும் நடைபெறவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருவது எந்த நாளோ?'' என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios