Asianet News TamilAsianet News Tamil

தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் இந்துக்களை கோர்த்து விட்டு சதியா..? கடுப்பான ஹெச்.ராஜா..!

 அமைப்பின் பெயரைப் போடாமல் திருமண் அணிந்த இந்துவின் படத்தை வெளியிட்டுள்ள செயல் திட்டமிட்ட சதி. 

Hindus at Tabliq Jamaat Conference H. Raja for tenson
Author
Tamil Nadu, First Published Mar 31, 2020, 5:53 PM IST

டில்லி நிஜாமுதினில் நடைபெற்ற தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய செய்தியில் இந்து மதத்தினரின் புகைப்படத்தை வெளியிட்டு சதி செய்வதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டவிட்டர் பக்கத்தில், ‘’மார்ச் 8,9,10 தேதிகளில் டில்லி நிஜாமுதினில் நடைபெற்ற தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் இச்செய்தியை வெளியிட்ட தந்தி டிவி அமைப்பின் பெயரைப் போடாமல் திருமண் அணிந்த இந்துவின் படத்தை வெளியிட்டுள்ள செயல் திட்டமிட்ட சதி. Hindus at Tabliq Jamaat Conference H. Raja for tenson

இந்த கடினமான காலகட்டத்தில் எந்தவித சர்ச்சையும் வேண்டாம் என்று நாம் பொறுமை காத்தால் ஒரு தொலைக்காட்சி இந்துக்களை திட்டமிட்டு இழிவு படுத்துவது அனுமதிக்க முடியாது. இச்செயலுக்கு தந்தி டிவி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை தேவை.

 

அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பரிசோதனை செய்யப்படாத மீதி 519 பேரும் எவ்வித கால தாமதமும் அன்றி உடனடியாக தாங்களே முன் வந்து சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இது அவர்களின் சமுதாய கடமை ஆகும்’’ எனத் தெரிவித்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios