தமிழகத்திலிருந்து என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்றால் தமிழக இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த அபாய ஒலி, அபாயமணி என நித்யானந்தா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’என் மீது எத்தனை கொலைவெறித் தாக்குதல்கள். எத்தனை மத தாக்குதல்கள். எத்தனை நிலைகளில் என்னை தாக்கப் பார்த்தார்கள். இதை உபயோகப்படுத்தி அழித்து விடத் துடித்தார்கள்.  வழக்கை போட்டுஎன் வாழ்க்கையை முடித்து விட நினைத்தார்கள். மீனாட்சி அருளால், சொக்கநாதர் ஆசியால், ஞானசம்பந்தர் அருளால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. பட்டாபிஷேகம் முடிந்தது. தமிழ்நாட்டுக்கும் எனக்கு இருக்கிற ஒரே உறவு அண்ணாமலையார் கோயில், மீனாட்சி அம்மன் கோவிலும் தான். மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான எந்த கோயிலுக்கும் வரக்கூடாது என தீர்ப்பு எழுதிவிட்டார்கள்.

வேறு என்ன பண்ணலாம். சொக்கநாதன் கொடுத்ததை சத்தியம் என்று நிரூபிக்க வாழ்ந்து தான் தீருவேன். அவரை அழைத்தேன். என்ன பரிசு கிடைத்ததா? எனக்கேட்டார். நான் உடனே கொடுத்த அவற்றில் குற்றம் என்று சொல்லிவிட்டார்கள் என கூறினேன். மீனாட்சி, மீனாட்சி என்றேன். ஏன் என்ன ஆச்சு தம்பி? என்றார். தம்பி உனக்கு ஒரு ஆசிரமத்தை உருவாக்கித் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். நான் அமர்ந்திருப்பது மீனாட்சி கொடுத்த சிம்மாசனம். அடா பரமசிவன் கொடுத்து ஞானம். இது கர்வம் அல்ல.

 தமிழகத்திலிருந்து என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்றால் தமிழக இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த அபாய ஒலி, அபாயமணி. அபாய செய்தி எனக்கல்ல. அது உங்களுக்கு. காலம் நான் சொல்வது உங்களுக்குப் புரிய வைக்கும். சொக்கரும் மீனாட்சியும் என்னை காப்பாற்றி விட்டார்கள்.  என்னை சொக்கனும் மீனாட்சியும் காப்பாற்றி விட்டார்கள். என்னை அங்கே வைக்கவில்லை என்றால் அந்த இடம் பாதுகாப்பானது இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

 திராவிடம் ஆக்டோபஸ் மாதிரி. தமிழகத்தையே காலி செய்து விட்டது. வலிக்கும் என்பதுதான் வலிக்கின்ற உண்மை.  விஷத்தில் சர்க்கரை தடவி கொடுக்க கூடிய கும்பல் திராவிட கும்பல். அதற்கு தமிழ் என்ற சக்கரையை பயன்படுத்துகிறார்கள். தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என்று போராடிய கும்பல்கள் ஒருவேளை தமிழில் மந்திரம் ஓதி இருந்தால் ருத்திராட்சத்தை போட்டு தலையில் பட்டை அடித்து வந்து சிவநாமத்தை கூறி பக்திப் பெருக்கோடு மாறிவிடுவார்களா? யாரை ஏமாற்றும் வேலை இதெல்லாம். ஆகமப்படி பண்ணக்கூடாது அதுதான் அவர்களது தேவை. பாரம்பரியத்தை எல்லாம் சிதைத்து விட வேண்டும் அதுதான் அவர்களது தேவை. அதற்காகத்தான் எல்லா ஆர்ப்பாட்டமும் அதற்காக தன் தவறை பயன்படுத்திக் கொள்கிறார்கள்’’ என அவர் தெரிவித்தார்.