Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்...!! பகிரங்கமாக எச்சரித்த வைகோ...!!


போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவினால் தினமும் போராட்டம் நடக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார் .  சென்னையில் நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார் . 

here after revolution will happen in tamilnadu and protest will happen - dmdk vaiko warning
Author
Chennai, First Published Feb 16, 2020, 11:19 AM IST

போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவினால் தினமும் போராட்டம் நடக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார் . சென்னையில் நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார் .  இந்திய குடியுரிமை சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது .  இந்தநிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தில் திடீரென போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

here after revolution will happen in tamilnadu and protest will happen - dmdk vaiko warning

அதில் காவல்துறையினர் தடியடி நடத்தி  கூட்டத்தை கலைத்தனர் , அப்போது  கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் ,  இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .  இந்நிலையில் சென்னை  எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது .  இதில் அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி ,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ,  துணை பொதுச்செயலாளர் மல்லை  சத்யா ,  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் . 

here after revolution will happen in tamilnadu and protest will happen - dmdk vaiko warning

பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . இதில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சாதிமத வேறுபாடின்றி போராடிவரும் அனைத்து தரப்பு மக்கள் மீதும் தமிழக அரசு காவல்  துறையை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது .  இது மிகுந்த கண்டனத்துக்குரியதாகும் ஜனநாயகத்தில் இத்தகைய பாசிசப் போக்கை அனுமதிக்க முடியாது .  இதே நிலை தொடர்ந்தால்  அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம் நாள்தோறும் போராட்டக் களத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என வைகோ எச்சரித்ததுடன் , அக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாகவும் இது  நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Follow Us:
Download App:
  • android
  • ios