இந்து விரோதி அல்ல என ஸ்டாலின் சொல்வதை அவர்  சமயபுரத்துக்கு பால் குடம் எடுக்கும் வரை இதனை நான் நம்பமாட்டேன் என பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ’’திமுகவை இந்து விரோத கட்சியே அல்ல என்று அதன் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். சமயபுரத்துக்கு ஸ்டாலின் பால் குடம் எடுக்கும் வரை இதனை நான் நம்பமாட்டேன். தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

அப்படி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும். இதனைத்தான் ஸ்டாலின் விரும்புகிறார். மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் நிர்வாகம் முஸ்லிம்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் இருக்கிறது. ஆனால் இந்து ஆலயங்களின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. திமுக பிராமணர் எதிர்ப்பை கொள்கையாக கொண்டது. ஆனால் தற்போது பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரணடைந்துள்ளது என அவர் பேசினார்.