Asianet News TamilAsianet News Tamil

ப. சிதம்பரம் போட்ட ஒத்த ட்வீட்... சீறிப் பாய்ந்த ஹெச். ராஜா... ஏன் தெரியுமா?

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது எந்த மக்களின் கருத்து கேட்கப்பட்டது? 1953-ல் ஷேக் அப்துல்லாவை காங்கிரஸ் ஆட்சி கைது செய்து  சிறை வைத்ததா இல்லையா? 

H. Raja immediately reply to P.Chidambaram tweet
Author
Chennai, First Published Aug 15, 2019, 10:05 PM IST

காஷ்மீரில் 3 முதல்வர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பதிலடி கொடுத்திருக்கிறார்.H. Raja immediately reply to P.Chidambaram tweet
இந்திய சுதந்திர தினத்தையொட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், இன்று ட்விட்டரில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அந்த ட்வீட்டர் பதிவில், காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள் சுதந்திரமில்லாமல் இருப்பதாக கேள்விகளாக வைத்திருந்தார் ப. சிதம்பரம். அவருடைய ட்விட்டரில், “ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 3 முதல்வர்களுக்கு ஏன் சுதந்திரம் தடுக்கப்பட்டுள்ளது? இரண்டு முதல்வர்கள் ஏன் தனிமைச் சிறையில் வீட்டில் வைக்கப்பட்டுள்ளார்கள்? பிரிவிணைவாத அரசியல் தலைவர்கள் ஏன் ராணுவத்தினால் சிறைவைக்கப்பட்டுள்ளனர்?” என்று ப.சிதம்பரம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.H. Raja immediately reply to P.Chidambaram tweet
இந்தக் கேள்விக்கு மற்ற பாஜக தலைவர்களை முந்திக்கொண்டு பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்திருக்கிறார். ப. சிதம்பரத்தின் ட்விட்டுக்கு அவர் அளித்துள்ள பதிலில், “ஷேக் அப்துல்லா ஏன் தமிழகத்தில் சிறை வைக்கப்பட்டார் என்ற காரணத்தை மறந்துவிடக்கூடாது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியைப் பராமரிப்பதற்காக செய்யப்படுகிறது.” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.H. Raja immediately reply to P.Chidambaram tweet
இதேபோல ஹெச். ராஜா போட்ட மற்றொரு ட்வீட்டர் பதிவில், “கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது எந்த மக்களின் கருத்து கேட்கப்பட்டது? 1953-ல் ஷேக் அப்துல்லாவை காங்கிரஸ் ஆட்சி கைது செய்து  சிறை வைத்ததா இல்லையா? காஷ்மீரிலிருந்து இந்துக்களை கொன்று இந்து பெண்களை கற்பழித்து காஷ்மீரை விட்டு வெளியேற்றியதை இவர்கள் கண்டித்தனரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios