Asianet News TamilAsianet News Tamil

அரசு பள்ளிகளில் அதிரடி திட்டம்... இந்தியாவிலேயே இல்லாத புதிய அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்..!

அரசு பள்ளிகள் துவங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு உடற்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

Government Schools Action Plan... Senkottaiyan Anouncement
Author
Tamil Nadu, First Published Nov 27, 2019, 3:31 PM IST

Government Schools Action Plan... Senkottaiyan Anouncementஅரசு பள்ளிகள் துவங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு உடற்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

அனைத்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை  அதிகாரிகளுடன் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார்.  அதன் பிறகு தனது டவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன். அதில், ’’தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’என அறிவித்துள்ளார்.

 

அதற்கான சுற்றறிக்கைகள் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்களின் உடல்நிலையை உற்சாகப்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் முன்னெடுத்துள்ளார். ஏற்கெனவே பல அதிரடித்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் துரித முயற்சிகளால் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்களின் கவனம் திசை திரும்பி வருகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios